ஜெய்பீம் திரைப்படத்தை உலகமே கொண்டாடுகிறது. ஆனால் அன்புமணி இராமதாசோ பாட்டாளி மக்கள் கட்சியினரை, ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராகவும் சூர்யாவுக்கு எதிராகவும் கொம்பு சீவிவிடுகிறார். இதன்மூலம், 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு' ஆகிவரும் பாட்டாளி மக்கள் கட்சியைக் கரைசேர்க்க முயலுகிறார் அன்புமணி. எந்த அளவிற்கு ஜெய்பீம் திரைப்படத்திற்கும் சூர்யாவிற்கும் பொதுச் சமூகம் ஆதரவளிக்கிறதோ அந்த அளவிற்கு அன்புமணி இராமதாஸ் மீதும் பாட்டாளி மக்கள் கட்சி மீதும் எதிர்ப்பைப் பதிவு செய்கிறது. பாமகவினர் கிட்டத்தட்ட ஒரு குண்டர் படையாகவே மாறிவிட்டனர். எனவே, வன்முறைக்குத் தூபம் போடும் பாமக-வினர் மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தை ஏவி கட்டுப்படுத்த வேண்டுமென ஆவேசமாகக் குரல் எழுப்புகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் பாருங்கள்! பகிருங்கள்!
நன்றி: Arakalagam tv