Showing posts with label smelter. Show all posts
Showing posts with label smelter. Show all posts

Sunday, 20 December 2020

ஸ்டெர்லைட் போராட்டம்: பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு!

"ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரி" என உச்சநீதிமன்றம் வரை வாதாடும் தமிழக அரசு, ஸ்டெர்லைட்டை மூடுவதற்காகப் போராடிய ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது கடந்த இரண்டரை ஆண்டுகளாக போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறாமல் பழி வாங்குவது ஏன்?

ஸ்டெர்லைட் எதிர்ப்புத் துண்டறிக்கைகளை ஸ்ரீவைகுண்டத்தில் கொடுத்ததாக பண்டாரம் பட்டியைச் சேர்ந்த சந்தோசை காவல்துறையினர் சட்டவிரோதமாகக் கைது செய்ததைக் கண்டித்து சந்தோசை விடுவிக்கக்கோரி 17-01-2019 அன்று பண்டாரம்பட்டி சந்தன மாரியம்மன் கோயில் முன்பு மக்கள் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பல ஸ்டெர்லைட் எதிர்ப்பு முன்னணியாளர்கள் அதில் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்திற்கு சிப்காட் காவல்துறை வழக்குப்பதிவு செய்து 2 ஆண்டுகள் கழித்து 10 நபர்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 10 பேரில் ஒருவர் பண்டாரம்பட்டி வசந்தி அம்மா அவர்களின் கொழுந்தனார் பிரபாகரன் ஆவார். அவர் மாரடைப்பால் சிறிது காலத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையின்பேரில் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.

அதனால் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் (JM3) நாங்கள் அனைவரும் ஆஜரானோம். இந்த வழக்கு வரும் 04-01-2021 வாய்தா போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மூன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட வழக்குகள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதில் கடந்த 12-02-2018, 13-02-2018 ஆகிய நாட்களில் தூத்துக்குடி சிதம்பர நகர் அருகில் குழந்தைகள் கலந்து கொண்டு ஸ்டெர்லைட்டை மூடப் போராட்டம் நடத்தியதற்காக ஒரு வழக்கும், அந்தப் போராட்டத்தில் "ஸ்டெர்லைட்டை மூடு" என்ற வாசகம் அடங்கிய பேனர் இருந்ததற்காக  இரண்டாவது வழக்கும், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னணியாளர்கள் மீது மூன்றாவது வழக்கும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது குமரெட்டியாபுரத்தில் உள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பு முன்னணியாளர்கள் மீதும், மே-17 இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட பலர் மீதும் குமரெட்டியாபுரம் வேப்ப மரத்துக்கடியில் உட்கார்ந்து இருந்ததற்காக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேப்ப மரத்துக்கடியில் யார் யார் உட்கார்ந்து இருந்தார்கள்? என்று விசாரித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது தமிழக அரசின் *சிபிசிஐடி* போலீஸ் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். அந்த வழக்கில் வரும் 23-12-2020 அன்று கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணையும் தற்போது வந்துள்ளது.

(மே 22-23 ல் நடந்த போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவது தனிக்கதை)

ஸ்டெர்லைட்டை மூட களத்தில் நின்ற, ஆதரவு தெரிவித்த கட்சிகள், அமைப்புகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட இந்த பொய் வழக்குகளை தமிழக அரசு ரத்து செய்ய கோரிக்கை வைக்கவும்,

தமிழக அரசும் இரத்து செய்ய முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

Wednesday, 14 October 2020

"மக்கள் நலன்" என்ற பெயரில் தொடரும் ஸ்டெர்லைட்டின் சதித்தனம்!

ஸ்டெர்லைட்டின் கைக்கூலிகள் விநியோகம் செய்த SDR தண்ணீர் கேன்கள் சோரீஸ்புரத்தில் தடுத்து நிறுத்தம்:

தூத்துக்குடி, அய்யனடைப்பு-சோரீஸ்புரம் பகுதியில் இன்று (14-10-2020) காலை 7.00 மணியளவில் ஒரு தனியார் வாகனத்தில் SDR குடிதண்ணீர் கேன்கள் மூலம் இலவசமாக ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. கேன் தண்ணீர் வாங்குபவர்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையின் "தாமிர சுரபி" என்ற பிரிண்ட் செய்யப்பட்ட QR கோடுடன் உள்ள அடையாள அட்டை கொடுக்கப்பட்டு, செல்போன் மூலம் ஸ்கேன் செய்து விவரக்குறிப்புகள் பெற்று பதிவுசெய்து கொண்டு அதன் பின்னர் தண்ணீர் கொடுக்கிறார்கள்.

இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் அரசின் அனுமதியில்லாமல் தண்ணீர் விநியோகம் செய்த வாகனத்தை தடுத்து நிறுத்தினார்கள். தண்ணீர் விநியோகம் செய்த நபர் தண்ணீர் கேன்களை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

கிராம நிர்வாக அலுவலருக்கும், சிப்காட் காவல் துறையினருக்கும் மற்றும் உளவுத்துறை போலீசுக்கும் தகவல் கூறினார்கள். ஆனால் பிடிபட்டது "ஸ்டெர்லைட் விவகாரம்"  என்பதால் யாருமே சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் சோரீஸ்புரம் பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு திரண்டு சென்று எழுத்துப் பூர்வமான புகார் ஒன்றை கொடுத்து 30 க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன்களையும் ஒப்படைத்துள்ளனர். புகாரை பெற்ற கிராம நிர்வாக அலுவலர் "தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, காவல்துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். "உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறையை வரச்சொல்லுங்கள்" என்று விடாப்பிடியான போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் பகல் 12.00 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன்பிறகு தண்ணீரை தடுத்து நிறுத்திய சோரீஸ்புரம் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு கூறிச்சென்றுள்ளனர்.

அதன்பிறகு  நமது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நாமும் சட்ட உதவிக்கு காவல் நிலையம் சென்றோம். நடந்த விபரத்தை எழுதி புகாராக காவல் ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் அரசின் அனுமதி இல்லாத காரணத்தால் தண்ணீர் விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக பல மணிநேர போராட்டத்திற்கு பிறகுதான், புகார் கொடுக்கும் நபர்கள் உறுதியாக இருந்ததைக் கண்டுதான் குறைந்தபட்சம் இதையாவது செய்தார்கள். 

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஸ்டெர்லைட்டை மூடிய உத்தரவிற்குப் பிறகு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடத்துவது குறித்து குமரெட்டியாபுரம் மக்களை சந்திக்க மக்கள் கூட்டமைப்பினர் சென்றபோது ஊருக்குள் நாங்கள் சென்ற 2-வது நிமிடத்தில் தலையாரி வந்தார். "ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் வந்தால் உடனடியாக தகவல் சொல்ல எனது மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள், அதனால் என்னை தப்பாக நினைக்க வேண்டாம், உங்கள் பெயர் முகவரியை கொடுங்கள்" என்றார். அதன்பிறகு 5-வது நிமிடத்தில் சிப்காட் காவலர்கள் புயல் வேகத்தில் வந்தனர். எங்களை விசாரித்தனர்.

ஆனால் இன்று தகவல் சொல்லி சுமார் 5 மணி நேரத்திற்கு பின்புதான் காவல்துறை வருகிறது. காவல்துறை இவ்வளவு காலதாமதமாக வருவதற்குள் சம்பவ இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது?  ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் அடித்துச் சாகட்டும் என்று சிப்காட் காவல்துறை நினைத்துக் கொள்கிறதா? இதுபோல சம்பவங்கள் தொடர்வதால் ஜனநாயக பூர்வமான போராட்டங்களை மீண்டும் மக்கள் எடுக்க வேண்டிய சூழல்  ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை கடுமையாக எச்சரித்து சட்டப்படியான நடவடிக்கைகளை அவர்கள் மீது மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்  உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் ஸ்டெர்லைட் கைக்கூலிகளின் நோக்கம் அதுவல்ல. சட்டம் ஒழுங்கை கெடுப்பதுதான் அவர்கள் திட்டம்.

இப்படியே சதித்தனமான வேலைகளை "மக்கள் நலன்" என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலை அரங்கேற்றுவதை தூத்துக்குடி மக்கள் அறியாமல் இல்லை. அமைதி காக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை மதிக்கிறார்கள். ஆனால் ஸ்டெர்லைட் ஆரவாளர்கள் நீதிமன்ற உத்தரவையும், தமிழக அரசின் அரசாணையையும் எப்போதுமே மதிப்பதில்லை என்பது தூத்துக்குடி மக்களுக்கு தெரியாததா? வேதாந்தா கார்ப்பரேட்டால் அரசு துறைகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. நாம் தான் கட்டவிழ்க்க வேண்டும்.

ஸ்டெர்லைட்டின் கடைசி செங்கலும் அகற்றப்படும் வரை தூத்துக்குடி தூங்காது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.



Tuesday, 18 August 2020

தீர்ப்புக்குப் பிறகும் பிஜேபி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு!

உயர்நீதிமன்றத்தில் இன்று வந்த தீர்ப்பு....

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இலட்சக்கணக்கில் கலந்துகொண்ட மக்களுக்கும், உயிர்நீத்த போராளிகளுக்கும் கிடைத்த வெற்றி!

தீர்ப்பு வந்த பிறகும் பிஜேபி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு.

ஸ்டெர்லைட்டை உடனடியாக சிப்காட்டிலிருந்து அகற்றவேண்டும்.

ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும்! நாமும் நமது போராட்டத்தை இறுதிவரை தொடர்வோம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் உரை.

நன்றி: அறக்கலகம்

Sunday, 24 May 2020

கூட்டமைப்பு சார்பாக ஸ்டெர்லைட் தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக தூத்துக்குடி மற்றும் பல்வேறு கிராமங்களில் தியாகிகளுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி 22.05.2020 அன்று செலுத்தப்பட்டது.

அதன் பதிவுகள் - சில

தூத்துக்குடி - VMS  நகர்



தூத்துக்குடி - சத்யா  நகர்


தூத்துக்குடி - ரஹமதுல்லாபுரம்


தூத்துக்குடி - மீளவிட்டான்


தூத்துக்குடி - முத்தம்மாள் காலனி


தூத்துக்குடி - டூவிபுரம்

தூத்துக்குடி - பண்டாரம்பட்டி


தூத்துக்குடி - குமரெட்டியாபுரம்


தூத்துக்குடி - காயலூரணி


தூத்துக்குடி - மடத்தூர்


தூத்துக்குடி - தெற்க வீரபாண்டியபுரம்


தூத்துக்குடி - பெரிய நாயகிபுரம்


தூத்துக்குடி - தருவை குளம்




தூத்துக்குடி - ராஜபாளையம்

தூத்துக்குடி - சிலுவைப் பட்டி

தூத்துக்குடி - தாளமுத்து நகர்






தூத்துக்குடி - குத்துச் சண்டை வீரர்கள்

#இரத்தத்தால் அஞ்சலி!
இரத்தம் சிந்தி #தூத்துக்குடி மண்ணையும் மக்களையும் காத்த... #பாக்சர் ரஞ்சித் உட்பட #15தியாகிகள் & காயம்பட்டவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட #குத்துச்சண்டை கழகம், #விளைவுப் பூக்கள் அறக்கட்டளை & #ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று(22.05.20) இரத்தத்தால் #அஞ்சலி செலுத்தப்பட்டது!






தூத்துக்குடி - PRPC அலுவலகத்தில்
மே22
நீங்கள் மறைந்து போகவில்லை
நீங்கள் இறந்து போகவில்லை
நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள்
நீங்கள் மறைக்கப்படவும் மாட்டீர்கள்
நீங்கள் அடுத்த தலைமுறைக்காக சமர் புரிந்துள்ளீர்கள்
நீங்கள் மாண்டு எங்களுக்கு உயிர் தந்துள்ளீர்கள்
நாங்கள் உயிர் உள்ளவரை எங்கள் மூச்சுக்காற்றில் வாழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு சமர் களப்பலியாளர்களுக்கு வீரவணக்கம்!
தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்ப மையம்
தூத்துக்குடி

தொடர்புடைய பதிவுகள்

Friday, 22 May 2020

PRPC சார்பில் ஸ்டெர்லைட் தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சிப் பதிவுகள்.

தூத்துக்குடி
மாவட்ட அமைப்பாளர் அரிராகவன்
மதுரை
மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன்

மாவட்டச் செயலாளர் லயனல் 


திருச்சி
மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம்

சென்னை

மாவட்டச் செயலாளர் ஜிம்ராஜ் மில்டன்

தகவல் 
மக்கள்  உரிமைப் பாதுகாப்பு மையம்