Showing posts with label கரோனா. Show all posts
Showing posts with label கரோனா. Show all posts

Tuesday, 27 April 2021

குவியும் பிணங்கள்! கதறும் மக்கள்! மோடியின் கையாலாகாத்தனம்!

கரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை இந்தியாவையே உலுக்கி வருகிறது. நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், வரும் நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவும் சூழலில், நோய்த் தொற்றுக்கு ஆளானோர் சுவாசிக்க பிராணவாயுகூட இல்லாமல் வட இந்தியாவில் பிணங்கள் குவிகின்றன. இராமனுக்குக் கோவில் கட்டினால் போதாது; கொத்துக் கொத்தாய் மடியும் மக்களைக் காக்க குறைந்தபட்ச மருத்துவ வசதியைக்கூட செய்யத்தவறிய கையாலாகாத மோடியின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிடுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் ‌‌‌‌‌அவர்கள்


நன்றி: கருஞ்சட்டைப் படை

.

Tuesday, 18 August 2020

கரோனா நிவாரணப் பணியில் வடசென்னை மக்கள் உதவிக் குழு!

 நண்பர்களே,

தொடர்ந்து அரசு அறிவித்து வரும் ஊரடங்கால், பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை. பல தொழில்களுக்கு இன்னும் அரசு அனுமதி தரவில்லை. ஆகையால், இன்றும் வாழ்வாதார நெருக்கடியில் மக்கள் இருக்கிறார்கள்.  ஆகையால், வட சென்னை மக்கள் உதவிக்குழு தொடர்ந்து மக்களுக்கு உதவிக்கொண்டு இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக கடந்த வியாழக்கிழமை அன்று (06/08/2020) நூறு பேருக்கு ஒரு குடும்பத்திற்கு தேவையான‌ அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு  உள்ளிட்ட மளிகைத் தொகுப்பை வழங்கினோம். 

குழு ஆரம்பித்ததிலிருந்து இதுவரை ஆயிரத்து பத்து பேருக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம்.  இன்றைய பயனர்களில் 25 பேர் புதுவண்ணை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கும் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும், 75 பேர் தமிழ்த் திரைப்படத் துணை நடிகர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டது.

நாம் மேலே சொன்னது போல ஊரடங்கில் இன்னும் பல தொழில்கள் முடங்கித்தான் போயிருக்கிறது. ஆகையால், மக்களுக்குத் தேவையும் அதிகமாக இருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை எல்லாம் ஊரடங்கு அறிவித்த‌ அரசு தான் கவனம் கொடுத்து செய்ய வேண்டும்.  ஆனால், செய்வதில்லை. நம் மக்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நம்மால் இயன்ற சிறிய உதவிகளைச் செய்துவருகிறோம்.

ஆகவே, இதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு இயன்றவர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சிரமப்படுபவர்கள் உதவி தேவையெனில் தொடர்பு கொள்ளவும் ,

நன்கொடை அளிக்க ,

C. Noordeen.  Canara Bank, 

Thambuchetty Street Branch. 

S.B. A.C.No.  0913101289441. 

IFSC. CNRB0000913.

G pay no. 9884189570

பின்குறிப்பு :  உதவி பெறுகிறவர்களின் முகங்களை எப்போதும் மறைப்போம். இப்பொழுது அனைவருமே மாஸ்க் அணிந்திருப்பதால், முகங்களை மறைக்கவில்லை.

தகவல்:

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை

மதுரையில் கரோனா மருத்துவ முகாம்!

கரோனா : மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்கள் மருத்துவ முகாம்!

#முதல்நாள் மருத்துவ முகாமில்… (06/08/2020)

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை சார்பாக கரோனா தடுப்பு ஹோமியோபதி மருந்து ஆர்சனிக்கம் ஆல்பம் 30 மதுரை நகர் சுற்று வட்டார ஊர்களில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று மதுரை நகர்ப் பகுதிகளில் பரவி வருகிறது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆர்சனிக்கம் ஆல்பம் 30 மருந்தினை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த மருந்து நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும் என்று மக்களிடம் பலத்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் அதை விரும்பிக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மருந்துக் கடைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ம.உ.பா.மையம் மதுரை மற்றும் சென்னையில் சில தன்னார்வலர்களுடன் இணைந்து பல ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.

தற்போது மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி  மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து இன்று மதுரை நகர் சுற்றுவட்டாரத்தில் சுமார் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு மருந்து வழங்கப்பட்டது. 

கல்லூரி முதல்வர் மரு.கார்த்திகேயன் அவர்களின் பரிந்துரைப்படி பேரா.அரிகரன் அவர்கள் 3000 மருந்து குப்பிகள் (container) (ஒரு குப்பி மருந்தை 6 பயனாளிகள் உட்கொள்ளலாம்) வழங்கியும் மரு.முருகேசன், மரு.திருவரங்கன் ஆகிய இரண்டு மருத்துவர்களை அனுப்பியும் உதவினர். 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை துணைத் தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் அவர்களது பொறுப்பில் விளாச்சேரி ஊராட்சிமன்றத் தலைவர் திரு.முருகன் அவர்கள் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் முகம்மது பிச்சை அவர்களது முன்னிலையில் இன்று காலை 10 மணிமுதல் 2 மணிவரை விளாச்சேரி, மகாலட்சுமி காலனி, மொட்டமலை, திருநகர், அக்கிரகாரம், 5-வது வார்டு பகுதிகளில்  6000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

பிற்பகல் 4-00 மணியளவில் யா.ஒத்தக்கடை சுற்றுப் பகுதிகளில் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் திரு.சரவணன் அவர்கள் ஏற்பாட்டில் APJ அப்துல் கலாம் அபே ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர் சங்கத் தலைவர் சேக் அப்துல்லா தலைமையில் 4000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடை வெளியைக் கடைபிடித்தனர். மருத்துவர்கள் இருவரும் மருந்து உட்கொள்ளும் முறை, கொரோனாவிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை விளக்கியும் மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தும் மருந்துக் குப்பிகளை விநியோகித்தனர்.

மருந்துக்குப்பிகளை வழங்கிய திருமங்கலம் அரசு ஹோமியோ மருத்துவக் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மருந்துகளை விநியோகித்த மருத்துவர்களுக்கும் நிகழ்வுகளுக்குத் தலைமை  ஏற்ற விளாச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், ஆட்டோ சங்கத் தலைவர் சேக் அப்துல்லா மற்றும் மக்கள் அதிகாரம் மதுரை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சரவணன் ஆகியோருக்கு ம.உ.பா.மையம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

#இரண்டாம் நாள் மருத்துவ முகாமில்… (07/08/2020)

மதுரை, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சோளங்குருணியில் ஊராட்சித் தலைவர் திரு.மணிராஜ் அவர்கள் தலைமையில் 1500 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. குசவன் குண்டு கிராமத்தில் திரு.பெரியகருப்பன் (PRPC) தலைமையில் 1000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

வலையங்குளத்தில் ஊராட்சித் தலைவர் திருமதி முத்துப் பிள்ளை பெருமாள் அவர்கள் தலைமையில் முன்னாள் தலைவர் திரு வெ.பிச்சை(PRPC) அவர்கள் முன்னிலையில் பெருமாள் கோவில் அருகில் திருமண மண்டபத்திலும் வ.குளம் காலனி, 20 வீட்டுக் காலனி ஆகிய இடங்களிலும் 4000 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடித்து மருந்து வாங்கிச் சென்றனர். முகாம் தொடக்கத்தில் கொரோனா  டெஸ்ட் எடுப்பதாகக் கருதி வரத் தயங்கிய மக்கள் பின்னர் ஹோமியோ மருந்து தரப்படுவதை அறிந்து சாரை சாரையாக வந்து வாங்கிச் சென்றனர். தோழர்கள் பெரிய கருப்பன், பழனிக்குமார், அய்யனார், சுப்பிரமணி ஆகியோர் முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்தனர்.

மாலை 5.30 முதல் 7.30 மணி வரை செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் முண்டு வேலம்பட்டி,மேட்டுப்பட்டி ஆகிய ஊர்களில் மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ந.குருசாமி அவர்கள் தலைமையில் தோழர் திசை கர்ணன் முன்னிலையில் 1500 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பொழுது சாய்ந்த பின்னும் மக்கள் ஆர்வமுடன் வந்து விளக்கங்களைக்  கேட்டுத் தெரிந்து கொண்டு வாங்கிச் சென்றனர். 

6,7-08-2020 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற முகாம்களை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை துணைத் தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

அனைத்து பயனாளிகளும் மருந்தினை உட்கொண்டு  நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற்று கொரோனாவை வெல்ல வாழ்த்துகிறோம்.

மருந்தினை இலவசமாக வழங்கி மருத்துவக் குழுவினையும் அனுப்பி உதவிய  திருமங்கலம் அரசு ஹோமியோ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பொறுப்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகிறது.

லயனல் அந்தோணிராஜ்,

செயலர்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,

மதுரை.

7339329807


Thursday, 23 July 2020

போராட்டக்களத்தில் தமிழக வழக்குரைஞர்கள்!

அன்புடையீர் வணக்கம்!

22.07.2020 ஆம் தேதி (புதன்கிழமை) நமது கூட்டுக்குழுவின் பொதுக்குழுக்கூட்டம்  மாலை 5 மணியளவில் ' Google Meet' என்ற இணைய வழியாக நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் முன்னாள்  தலைவர் திரு. P. திருமலைராஜன் அவர்களும், முன்னாள் பொதுச்செயலாளரும், பார்கவுன்சில் உறுப்பினருமான திரு. MRR. சிவசுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டனர். 

கரோனா பெருந்தொற்றின் காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலியிலும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெறிவித்துக்கொள்கிறேன். மேற்படி கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்காக மத்திய உள்துறை  அமைச்சகம் Dr.Ranbir Singh அவர்கள் தலைமையில் அமைத்த 5 பேர் கொண்ட குழுவினை கலைத்திட வேண்டுமென்றும்;

2. மேற்படி குழு அமைக்கப்பட்டதற்கு நமது கூட்டுக்குழுவின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கையினை அந்தக் குழுவிற்கு அனுப்பிவைப்பதென்றும்; 

3. கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மத்திய அரசு மேற்படி 5 பேர் கொண்ட குழுவினை அமைத்து குற்றவியல் சட்டங்களில் அடிப்படைத் தன்மையை மாற்றி அமைக்கும் விதமாக திருத்தங்கள் கொண்டுவர முற்படுவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டம் நடத்தவேண்டியுள்ள நிலையில், அப்படிப்பட்ட  போராட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல தலைவர் தலைமையில் கீழ் கண்ட 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

1. திரு. ப. நந்தகுமார் ( தலைவர், கோவை)

2. திரு. O. சகாபுதீன் ( பொதுச்செயலாளர், திருச்சி)

3. திரு. R. மகேஷ் (பொருளாளர், நாகர்கோவில்)

4. திரு.P. திருமலைராஜன்
(முன்னாள் தலைவர், ஈரோடு)

5. திரு. MRR. சிவசுப்பிரமணியன்
( முன்னாள் பொதுச்செயலாளர்,மற்றும்  பார்கவுன்சில் உறுப்பினர், தஞ்சாவூர்)

6. திரு. V.K. சுப்பிரமணியன்
( துணைத்தலைவர்,  அவினாசி)

7. திரு. தமிழ் இராஜேந்திரன்
 ( அட்வகேட், கரூர்)

8 திரு. கண்ணன்
( துணைத்தலைவர், திருவண்ணாமலை) மற்றும்

9. திரு. செந்தில்குமார்
( துணைத்தலைவர், திருநெல்வேலி 

4. நான்கு மாதங்களாக மூடப்பட்ட நிலையில் உள்ள நீதிமன்றங்களைத் திறக்க வேண்டுமென்றும்,
குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த 5 பேர் கொண்ட குழுவினை கலைத்திட வேண்டுமென்றும்,  அதனை வலியுறுத்தும் வகையில்
31.07.2020 ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் அந்தந்த நீதிமன்றங்களின் முன்பாக தனி மனித இடைவெளிவிட்டு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடுத்துவதென்றும்.
ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ப. நந்தகுமார்
தலைவர்
JAAC

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் திருவண்ணாமலை

Saturday, 30 May 2020

மருத்துவர்கள் பாதுகாப்பு கேள்விக் குறியா?

கரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகத் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்களுடைய பாதுகாப்புக்குத் தமிழக அரசு போதிய கவனம் செலுத்துகிறதா?

ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைச் செயலாளர் வழக்குரைஞர் சு.ஜிம்ராஜ்  மில்டன்.
நன்றி : MEIARIVU TALKS

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Wednesday, 27 May 2020

கரோனா : மக்களுக்கு நிவாரண உதவி









நண்பர்களே ,

வடசென்னை மக்கள் உதவிக்குழு சார்பாக ஊரடங்கு அறிவித்த மறுவாரத்திலிருந்து இந்தக்குழு உருவாக்கி, இதுவரை அறுநூற்று ஐம்பது (650) குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளோம்.

இன்று (26/05/2020) நமது நண்பர் திரு. முனுசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுக் கூட்டம் புதுவண்ணை பகுதியில் நடத்தப்பட்டது. அவர் கடந்த காலங்களில் நம்முடன் மக்கள் பணியில் ஈடுபட்டவர். அவரின் சமூக பங்களிப்பை பற்றி பழகிய நண்பர்கள் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் வடசென்னை மக்கள் உதவிக்குழு சார்பாக ஊரடங்கால் பாதிக்கப் பட்ட புதுவண்ணை பகுதியை சேர்ந்த உணவுக்கே கஷ்டப்படும் ஐம்பது குடும்பங்களுக்கு ஐந்து கிலோ அரிசி, பருப்பு, சமையல், எண்ணெய், கோதுமை, சேமியா பாக்கெட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பகுதியில் சமூக அக்கறை கொண்ட ஆர்வலர்களும், நண்பர்களும் கலந்துகொண்டார்கள். எழுத்தாளர் பாக்கியம் சங்கரும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நிவாரண பணிகளை செய்த படியால் வேறு பகுதி இளைஞர்களும் நமது குழுவில் இணைந்து செயல்பட தூண்டியுள்ளது. மேலும் நிவாரண பணிகளை தொடர்ந்து எடுத்துச்செல்லும் வாய்ப்பையும் அதிகரித்துள்ளது .

நாம் தொடர்ந்து செய்யும் நிவாரண உதவிகள் அறிந்து நமக்கு பல நண்பர்களும், மக்களும் தொடர்ந்து நன்கொடை கொடுத்து வருகிறார்கள். ஊரடங்கால் அவதிப்படும் தொழிலாளர்களின் நிலை உணர்ந்து, தாய்லாந்து நாட்டில் ரயாங் பகுதியைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் கொடுத்த நன்கொடையால் ஏற்கனவே பாரிமுனைப் பகுதியில் 100 பேருக்கு நிவாரண உதவிகள் செய்திருந்தோம். இப்பொழுது செய்கிற உதவியிலும் அவர்களுடைய பங்கு பெரும்பான்மை. ஆகையால் அவர்களுக்கு நன்றி.
மக்கள் பணியில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள். உதவி தேவைப்படுபவர்களும் அழையுங்கள்.
 
#தொலைபேசி_எண்கள்:

9941314359
8825643335
7397468117
 
#நன்கொடை அளிக்க :

C. Noordeen,
Canara bank,
Thambuchetty street branch.
S.B. A.C.No. 0913101289441
IFSC Code : CNRB0000913
Gpay no . 9884189570
 
#குறிப்பு:

1. உதவி பெற்றவர்களின் சில புகைப்படங்கள் மட்டும்.

2. உதவி பெற்றவர்களின் புகைப்படங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
 
#வடசென்னை மக்கள் உதவிக்குழு,
சென்னை

கரோனா: மக்களுக்கு நிவாரணப் பணிகள்












#வடசென்னை மக்கள் உதவிக்குழு சார்பாக கொரானா நிவாரண உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். சென்னை பாரி முனையில், உயர்நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோரம் வசிப்பவர்களுக்கும், அன்றாடம் வேலை செய்து பிழைத்து வாழும் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கும், கடந்த வாரம் ஐம்பது குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்தோம். அந்த பகுதியில் இருந்து மீண்டும் உதவிக்காக நம்மை தொடர்புகொண்டார்கள். அதனால், இந்த வார ஞாயிற்றுக்கிழமை (24/05/2020) மேலும் ஐம்பது குடும்பத்திற்கு ஐந்து கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு, சேமியா பாக்கெட் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கினோம்.

மக்களுக்கு உதவிகள் வழங்க மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்த்தசாரதி, மீனாட்சி, எழுத்தாளர் பாக்கியம் சங்கர் அவர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் வந்து கலந்துகொண்டார்கள்.

நாம் தொடர்ந்து செய்யும் நிவாரண உதவிகள் அறிந்து நமக்கு பல நண்பர்களும், மக்களும் தொடர்ந்து நன்கொடை கொடுத்து வருகிறார்கள். ஊரடங்கால் அவதிப்படும் தொழிலாளர்களின் நிலை உணர்ந்து, தாய்லாந்து நாட்டில் ரயாங் பகுதியைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் திரு கார்த்திக், திரு. பாலசுப்பிரமணியன், திரு. யுவராஜ், திரு. சங்கர், திரு. அரவிந்தன், திரு. ரமேஷ் பரதன், திரு. மாணிக்கவேல், திரு. சரவணன் பாண்டி, திரு. விக்டர், திரு. மல்லிகார்ஜூனன், திரு. கணபதி. ஆகியோர் கடந்தவாரம் நன்கொடையாக ரூ.50,100 நன்கொடையாக வழங்கினர். இந்த வாரம் மீண்டும் ரூ. 10000 நன்கொடையாக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அவரவர் நட்பு வட்டங்களிலிருந்து உதவிகள் தந்துகொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஒருபுறம் மக்களின் தேவைகளும் அதிகரித்து கொண்டே போகிறது , இதை கருத்தில் கொண்டு இயன்றவர்கள் நிவாரணங்களை வழங்கிடுமாறு கோருகிறோம் .
மக்கள் பணியில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள். உதவி தேவைப்படுபவர்களும் அழையுங்கள்.

#தொலைபேசி_எண்கள்:
9941314359
8825643335
7397468117

#நன்கொடை அளிக்க :
C. Noordeen,
Canara bank,
Thambuchetty street branch.
S.B. A.C.No. 0913101289441
IFSC Code : CNRB0000913
Gpay no . 9884189570

#குறிப்பு: 1. உதவி பெற்றவர்களின் சில புகைப்படங்கள் மட்டும். 2. உதவி பெற்றவர்களின் புகைப்படங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

#வடசென்னை மக்கள் உதவிக்குழு,
சென்னை

Sunday, 17 May 2020

சென்னை உயர் நீதிமன்ற வளாகம் அருகில் கரோனா நிவாரண உதவிகள்!


நண்பர்களே,

வடசென்னை மக்கள் உதவிக்குழு சார்பாக சிரமப்படும் குடும்பங்களை கண்டறிந்து ஊரடங்கு அறிவித்த மறுவாரத்திலிருந்து தொடர்ச்சியாக நிவாரண உதவிகளை செய்துவருகிறோம்.  இதுவரை துப்புரவுத் தொழிலாளர்கள், அன்றாட கூலிகள், வீட்டு வேலை செய்பவர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் என 500 பேருக்கு உதவிகள் செய்துள்ளோம்.




கடந்த ஞாயிறன்று (17.05.20) சென்னை  உயர்நீதிமன்றம்  அமைந்திருக்கும் தம்பு தெரு , லிங்கி தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் சுத்தம் செய்கிற வேலைகளை செய்கிற பெண்களும், லோடு மேன் வேலை செய்யக்கூடியவர்களும், தினசரி கூலிகள் என தகர சீட்டுகளை கொண்ட வீடுகளிலும், குடிசை வீடுகளிலும், சாலையோரங்களிலும் வாழ்ந்துவருகிறார்கள்.


அவர்களில் மிகவும் சிரமப்படுகிறவர்களை கண்டறிந்து  50 டோக்கன்கள் வழங்கப்பட்டன. அவர்களை நேர இடைவெளி விட்டு, நமது சட்ட அலுவலகத்திற்கு வரவழைத்து,  உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்  கீதா,  ஜிம்ராஜ் மில்ட்டன், பார்த்தசாரதி மற்றும்  நண்பர்களின் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, சேமியா  உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கொண்ட தொகுப்புகள்  வழங்கப்பட்டது


நாம் தொடர்ந்து செய்யும் நிவாரண உதவிகள் அறிந்து நமக்கு பல நண்பர்களும், மக்களும் தொடர்ந்து நன்கொடை கொடுத்து வருகிறார்கள்.  இந்த முறை ஊரடங்கால் அவதிப்படும் தொழிலாளர்களின் நிலை உணர்ந்து, தாய்லாந்து நாட்டில் ரயாங் பகுதியைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் திரு கார்த்திக்,  திரு. பாலசுப்பிரமணியன், திரு. யுவராஜ், திரு. சங்கர், திரு. அரவிந்தன், திரு. ரமேஷ் பரதன், திரு. மாணிக்கவேல், திரு. சரவணன் பாண்டி, திரு. விக்டர், திரு. மல்லிகார்ஜூனன், திரு. கணபதி. ஆகியோர்  நன்கொடையாக ரூ.50,100 நன்கொடையாக வழங்கினர். அவர்களிடமிருந்து நன்கொடை பெற்றுத் தந்தவர் தன்னுடைய பெயரை வெளியிடவேண்டாம் என தெரிவித்துக்கொண்டார். 


அனைவருக்கும் மக்கள் உதவிக்குழு சார்பாக நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவோம். கொரானாவிலிருந்து நம் மக்களை காப்போம்

நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லல்பட்டு வருகிறார்கள். சென்னையில் அவர்கள் எங்கெங்கு வசிக்கிறார்கள் என்ற தகவல்களை சேகரித்துவருகிறோம். அவர்களுக்கும் உதவி செய்வதற்கான ஏற்பாடுகளை இப்பொழுது செய்துவருகிறோம்.

மக்கள் பணியில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.  உதவி தேவைப்படுபவர்களும் அழையுங்கள்.

#தொலைபேசி_எண்கள்:

9941314359
8825643335
7397468117

#நன்கொடை_அளிக்க:

C. Noordeen,
Canara bank,
Thambuchetty street branch.
S.B. AC No. 0913101289441.
IFSC CNRB0000913.
Gpay No. 9884189570

இப்படிக்கு,
#வடசென்னை மக்கள் உதவிக்குழு,
சென்னை.

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை

தொடர்புடைய பதிவுகள்

மதுரையில் கரோனா நிவாரண உதவிகள்!

சென்னையில் கரோனா நிவாரண உதவிகள்!

பழங்குடியினருக்கு கரோனா நிவாரண உதவி

Friday, 15 May 2020

கரோனாவும் மனித உரிமைப் பறிப்பும்! முகநூல் நேரலை!

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 25 முதல் இது வரை மூன்று கட்டங்களாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. மூன்றாவது கட்ட ஊரடங்கு மே 17 இல் முடிவடைய உள்ள நிலையில் அது மேலும் நீட்டிக்கப்படவே அதிக வாயப்புகள் உள்ளது.

கரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசு மேற்கொள்ளும் ஊடரங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் உண்மையில் கரோனாவை கட்டுப்படுத்தியதோ இல்லையோ,  வாழ்வாதாரங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்களின் வாழ்வுரிமைதான் முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. வேலையின்றி, வருவாய் இன்றி மக்கள் பசி பட்டினியால் அவதியுறுகின்றனர். வேலைக்குச் சென்ற இடத்தில் முதலாளிகளால் கைவிடப்பட்டதால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ வழியின்றி சொந்த ஊருக்குப் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்தே செல்கின்றனர். கைக்குழந்தைகளையும் முதியோர்களையும் சுமந்து கொண்டு செல்லும் காட்சிகள் பார்ப்போரின் கண்களைக் குளமாக்ககின்றன. போகும் வழியில் போதிய உணவின்றியும், குடிக்க நீரின்றியும் மற்றும் விபத்துக்குள்ளாகியும் மாண்டு போகின்றனர். பலர் பாதி வழியில் தடுக்கப்பட்டு பழைய இடத்திற்கே திருப்பி அனுப்பப்படுகின்றனர் அல்லது ஆங்காங்கே அடைக்கப்படுகின்றனர். புலம் பெயர் தொழிலாளர்களின் துயரங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது ஒரு கொடுந் துயரம்.

ஆனால் அயல் நாடுகளில் உள்ள மேட்டுக் குடியினர் விமானங்கள் மூலம் பாதுகாப்பாக சொந்த ஊருக்குத் திரும்ப மோடி அரசு ஏற்பாடு செய்கிறது.  பிற மாநிலங்களில் படிக்கச் சென்ற வசதி படைத்தோரின் வாரிசுகள்  பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்குப் பத்திரமாகத் திரும்ப ஆதித்யநாத்கள் அக்கறை செலுத்துகின்றனர்.

கரோனாவைக் காரணம் காட்டி இனி 12 மணி நேரம் உழைக்க வேண்டும் என சந்தடி சாக்கில் சட்டத்தைத் திருத்தி தொழிலாளர்களை ஒட்டச் சுரண்ட முதலாளிகளுக்குச் சலுகை வழங்கி உள்ளது மோடி-அமித்ஷா கும்பல்.   

அவசியத் தேவைகளுக்காக வெளியில் வருவோரிடம் காவல்துறை அத்துமீறி நடந்து கொள்வதும், அடித்துத் துன்புறுத்திப் பல்வேறு வழிகளில் அவமானப்படுத்துவதும், வாகனங்களைப் பறிமுதல் செய்வதும், பொய்வழக்குகள் புனைவதும் அன்றாட நடவடிக்கையாகவே மாறிப் போயுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி உயிரைப் பணயம் வைத்துப் பணிபுரியும் சூழல்தான் இன்றும் நிலவுகிறது. எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யமால் டாஸ்மாக்கைத் திறக்க துடியாய்த் துடிக்கிறார் எடப்பாடி. சாராயக் கடைகளை திறக்கக்கூடாது என தமிழகமே எழுந்து நின்ற போதும் அதை துச்சமென மதித்து கரோனா பரவினாலும் பரவாயில்லை, தான் கல்லா கட்ட வேண்டும் என்பதற்காக மக்களின் உணர்வுகளில் மண்ணை அள்ளிப் போட்டதோடு, சாராயக் கடைகளைத் திறக்காதே எனக் குரல் கொடுத்தோரின் குரல்வளையை நெறித்துச் சிறையில் அடைத்தது தமிழக அரசு.

கரோனா காலத்தில் உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்திருந்தும் ஆனந்த் தெல்தும்டெ உள்ளிட்ட சமூகச் செயல்பாட்டாளர்களை சிறைக்கு அனுப்புகிறார் மோடி.

கரோனாவைக் காரணம் காட்டி மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது. கண்ணியமான வாழ்க்கை சிதைக்கப்பட்டுள்ளது. சுதந்திரம்,  கருத்துரிமை மறுக்கப்பட்டுள்ளது.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் இது குறித்து முகநூல் நேரலையில் விரிவாகப் பேசவிருக்கிறார். அனைவரும் இணைந்திருங்கள்.
தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தொடர்புடைய பதிவுகள்

மோடியால் கரோனாவை எதிர் கொள்ள முடியுமா?
டாஸ்மாக் : கரோனாவின் கொலைக்கூடம்!
ஆகக் கொடியது எது? கரோனாவா? கொடுஞ் சட்டமா?
அரசின் ஊது குழலாகிப்போன போன ஊடகங்கள்!
டாஸ்மாக்கை மூடச்சொன்ன முதியவர் சிறைக் கொட்டடியில்!...

Monday, 11 May 2020

சென்னையில் கரோனா நிவாரண உதவிகள்!

நண்பர்களே,

வடசென்னை மக்கள் உதவிக்குழு சார்பாக சிரமப்படும் குடும்பங்களைக் கண்டறிந்து எங்களால் இயன்ற நிவாரண உதவிகளைச் செய்து வருகிறோம் 

இன்று (10/05/2020) காசிமேடு, மின்ட், புதுவண்ணை, திருவொற்றியூர் பகுதிகளைச் சேர்ந்த உணவுக்கே கஷ்டப்படுபவர்கள் சுமார் நூறு பேருக்கு அரிசியும் பருப்பும் கொடுக்கப்பட்டது.

மேலும் கரோனா தடுப்பு மருந்து என தமிழக அரசால் (23/04/2020) அரசாணை எண்: 201-ல் அங்கீகரிக்கப்பட்ட ஆர்சனிக் ஆல்பம் எனும் ஹோமியோபதி மருந்து நிவாரண உதவி பெற வந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

இதில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (PRPC) சென்னை கிளைச் செயலாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான திரு.ஜிம்ராஜ் மில்டன் அவர்கள் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார் .

சிரமப்படுபவர்கள்
உதவி தேவை எனில் ,
தொடர்பு கொள்ளவும்.

#நன்கொடை அளிக்க
C. Noordeen, Canara bank,
Thambuchetty street branch.
S.B.A/C. 0913101289441
IFSC : CNRB0000913.
Gpay no . 9884189570

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை

தொடர்புடைய பதிவுகள்

பழங்குடியினருக்கு கரோனா நிவாரண உதவி