பா.ஐ.க பற்றி அதிமுக தலைவர்களின் நாடகம்: மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களின் காணொளி பாருங்கள்! பரப்புங்கள்!
நன்றி: arakalagam tv
பா.ஐ.க பற்றி அதிமுக தலைவர்களின் நாடகம்: மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களின் காணொளி பாருங்கள்! பரப்புங்கள்!
நன்றி: arakalagam tv
இந்திய விவசாயிகளை பாதிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி திருவண்ணாமலை வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்!
"ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரி" என உச்சநீதிமன்றம் வரை வாதாடும் தமிழக அரசு, ஸ்டெர்லைட்டை மூடுவதற்காகப் போராடிய ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது கடந்த இரண்டரை ஆண்டுகளாக போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறாமல் பழி வாங்குவது ஏன்?
ஸ்டெர்லைட் எதிர்ப்புத் துண்டறிக்கைகளை ஸ்ரீவைகுண்டத்தில் கொடுத்ததாக பண்டாரம் பட்டியைச் சேர்ந்த சந்தோசை காவல்துறையினர் சட்டவிரோதமாகக் கைது செய்ததைக் கண்டித்து சந்தோசை விடுவிக்கக்கோரி 17-01-2019 அன்று பண்டாரம்பட்டி சந்தன மாரியம்மன் கோயில் முன்பு மக்கள் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஸ்டெர்லைட் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பல ஸ்டெர்லைட் எதிர்ப்பு முன்னணியாளர்கள் அதில் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்திற்கு சிப்காட் காவல்துறை வழக்குப்பதிவு செய்து 2 ஆண்டுகள் கழித்து 10 நபர்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 10 பேரில் ஒருவர் பண்டாரம்பட்டி வசந்தி அம்மா அவர்களின் கொழுந்தனார் பிரபாகரன் ஆவார். அவர் மாரடைப்பால் சிறிது காலத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையின்பேரில் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.
அதனால் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3ல் (JM3) நாங்கள் அனைவரும் ஆஜரானோம். இந்த வழக்கு வரும் 04-01-2021 வாய்தா போடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட வழக்குகள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதில் கடந்த 12-02-2018, 13-02-2018 ஆகிய நாட்களில் தூத்துக்குடி சிதம்பர நகர் அருகில் குழந்தைகள் கலந்து கொண்டு ஸ்டெர்லைட்டை மூடப் போராட்டம் நடத்தியதற்காக ஒரு வழக்கும், அந்தப் போராட்டத்தில் "ஸ்டெர்லைட்டை மூடு" என்ற வாசகம் அடங்கிய பேனர் இருந்ததற்காக இரண்டாவது வழக்கும், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னணியாளர்கள் மீது மூன்றாவது வழக்கும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது குமரெட்டியாபுரத்தில் உள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பு முன்னணியாளர்கள் மீதும், மே-17 இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட பலர் மீதும் குமரெட்டியாபுரம் வேப்ப மரத்துக்கடியில் உட்கார்ந்து இருந்ததற்காக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேப்ப மரத்துக்கடியில் யார் யார் உட்கார்ந்து இருந்தார்கள்? என்று விசாரித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது தமிழக அரசின் *சிபிசிஐடி* போலீஸ் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். அந்த வழக்கில் வரும் 23-12-2020 அன்று கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணையும் தற்போது வந்துள்ளது.
(மே 22-23 ல் நடந்த போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவது தனிக்கதை)
ஸ்டெர்லைட்டை மூட களத்தில் நின்ற, ஆதரவு தெரிவித்த கட்சிகள், அமைப்புகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட இந்த பொய் வழக்குகளை தமிழக அரசு ரத்து செய்ய கோரிக்கை வைக்கவும்,
தமிழக அரசும் இரத்து செய்ய முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.
வேளாண் சட்டங்கள்
விளைபொருள் ஊக்குவிப்புச் சட்டம் என்று சொல்லக்கூடிய விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டம்.
ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம் என்று சொல்லக்கூடிய விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம்.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்.
மேற்கண்ட மூன்று சட்டங்களும் கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டு 05.05.2020 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது.
இவை விவசாயிகளுக்கு எதிரானவை மட்டுமல்ல மாநில உரிமைகளையும் பறிக்கக் கூடியவை என்பதனால் பஞ்சாப் சட்டசபையில் ஆகஸ்டு 28 அன்று இச்சட்டங்களை ஏற்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹரியானாவிலும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகளிடம் இருந்து முப்பது ரூபாய்க்கு வாங்கப்படும் ஆப்பிள் நம்மிடம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவரை இடைத்தரகர்கள் கொள்ளையடித்த அந்த 70 ரூபாயும் விவசாயிகளுக்கு சென்றடையும்; அதேபோல மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள் மிளகாய்பொடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு நேரடியாக விற்பனை செய்து அதிக லாபம் பெற முடியும் என்றும், காஷ்மீரில் இருக்கின்ற விவசாயி நேரடியாக தமிழகத்திலும், தமிழகத்தில் உள்ள விவசாய நேரடியாக காஷ்மீரிலும் இணையவழி மூலம் தங்களுடைய உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்து அதிக லாபம் பெற முடியுமென்றும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் என்றும் இந்தச் சட்டங்களை ஆதரிப்போர் பேசி வருகின்றனர். இவையெல்லாம் உண்மையா என்பதை அந்தச் சட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டால்தான் புரிந்து கொள்ள முடியும்.
முதல் இரண்டு சட்டங்களும் மாநில உரிமைகளைப் பறிக்கக்கூடியவை. வேளாண்மை, நிலம், சந்தை, விவசாய வருமானத்தின் மீதான வரிகள், நிலம் தொடர்பான வரிகள், நிலத்தின் மீதான உரிமைகள் இவை அனைத்தும் இந்திய அரசியல் சட்டம் அட்டவணை 7 ன் கீழ் பட்டியல் 2 அதாவது மாநிலப் பட்டியலில் (14, 18, 28, 46, 47, 48, 49) வரக்கூடியவை. மாநில அரசுகளின் அதிகாரங்களை மத்திய அரசு பறித்துக் கொண்டு விட்டது. இதன் மூலம் மாநில அரசு தன்னுடைய அதிகாரத்தை இழந்தது மட்டுமல்ல கணிசமான வருவாயையும் இழக்க வேண்டி வரும். இந்தக் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் எடப்பாடி அரசு இந்தச் சட்டங்களை வரவேற்கிறது.
விலை பொருள் ஊக்குவிப்புச் சட்டம்
காஷ்மீர் ஆப்பிளை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கும் தமிழக அரிசியை காஷ்மீரில் விற்பனை செய்வதற்கும் ஏற்கனவே சுதந்திரம் மறுக்கப்பட்டு வந்தது போல ஒரு பொய் தோற்றத்தை உருவாக்கி இனி மாநிலங்களுக்கு உள்ளேயும் மாநிலங்களுக்கு இடையிலும் இணைய வழி மூலமாக வர்த்தகம் செய்வதற்கு சுதந்திரம் அளிக்கப்படுவதாக இந்தச் சட்டம் சொல்கிறது. வர்த்தகம் முடிந்த அன்றோ அல்லது மூன்று நாட்களுக்குள்ளோ பொருளுக்கான தொகையை செலுத்தி விட வேண்டும் என்கிறது சட்டம். ஆனால் எந்த ஒரு தனிநபரும் இந்த வர்த்தகத்தில் ஈடுபட முடியாது (பிரிவு:5). கூட்டுறவு அமைப்புகள் மூலம்தான் இணையவழி வர்த்தகத்தைச் செய்ய முடியும். இந்த கூட்டுறவு அமைப்புகளை யார் உருவாக்குவார்கள், அதிகாரம் யார் கையில் இருக்கும் என்பது குறித்து எந்த விளக்கமும் சட்டத்தில் இல்லை.
பொருளை விற்ற விவசாயிக்கும் பொருளை வாங்கிய வியாபாரிக்கும் வர்த்தகத்தில் பிரச்சினை ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர் வருவாய் கோட்ட அலுவலர் அல்லது உதவி ஆட்சியர் பொறுப்பிலுள்ள அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தால் அவர் ஒரு சமரசக் குழுவை ஏற்படுத்துவார். அதில் அவரோ அல்லது அவரால் நியமிக்கப்படும் ஒரு அரசு அதிகாரியோ தலைவராக இருப்பார். இருதரப்பிலிருந்தும் ஒருவரோ அல்லது இருவரோ அந்தக் குழுவில் இடம் பெறலாம். குறைந்தபட்சம் இரண்டு பேர் அதிகபட்சம் நான்கு பேர் இடம் பெறலாம். இந்த ஏற்பாட்டை 7 நாட்களுக்குள் அந்த அதிகாரி செய்து முடிக்க வேண்டும். அதன்பிறகு இரு தரப்பையும் விசாரித்து 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்குப் பணம் செலுத்தவோ அல்லது அபராதம் செலுத்தவோ அல்லது வர்த்தகத்தை தடை செய்தோ உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். அவர் அதன்மீதான உத்தரவை 30 நாட்களுக்குள் பிறப்பிக்க வேண்டும். 90 நாட்கள் வரைகூட மேல்முறையீடு செய்ய இச்சட்டம் அனுமதிக்கிறது. (பிரிவு:8). அதிகாரிகள் பிறப்பிக்கும் இந்த உத்தரவுகள் உரிமையியல் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்குச் சமமானது.
ஒரு கிராம நிர்வாக அலுவலரை சந்திப்பதே ஒரு விவசாயிக்கு குதிரைக்கொம்பாக இருக்கும்பொழுது தான் விற்ற பொருளுக்கு பணம் கிடைக்கவில்லை என்று கோட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரை அவ்வளவு எளிதில் சந்தித்துவிட முடியுமா? அல்லது அந்த விசாரணைக் குழுவில் தனது வாதங்களை முன்வைத்து வாதிட முடியுமா? இணையவழி வர்த்தகத்தை ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்துள்ள சிறு குறு விவசாயிகள் எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. விற்ற பொருளுக்கான பணம் கைக்கு வராதது மட்டுமல்ல, இதற்கான செலவுகளும் கூடுதலாக விவசாயி தலையில்தான் விழும்.
இதுகுறித்த முழு அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு (பிரிவு:12), மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்க முடியாது (பிரிவு:13), விவசாய உற்பத்தி சந்தை குழு (APMC-Agriculture Produce Market Committee) உள்ளிட்ட மாநில அரசின் சட்டங்கள் அனைத்திற்கும் மேலானது இந்த சட்டம் (பிரிவு:14), உரிமையியல் நீதிமன்றங்கள் தலையிட முடியாது (பிரிவு:15) என மாநில அரசு, நீதிமன்றங்கள், வழக்குரைஞர்கள் என அனைவரின் உரிமைகளையும் பறித்து விட்டது இந்தச் சட்டம்.
இணையவழி விற்பனையை ஊக்குவிப்பதன் மூலம் விளை பொருட்களை கொள்முதல் செய்யும் கடமையை அரசு கைவிடுகிறது. வேளாண்மை விளைபொருள் விற்பனை கூடங்கள் இனி இருக்காது. வேண்டிய மட்டும் கார்ப்பரேட் முதலாளிகள் விளைபொருட்களை வாங்கிக் குவித்துக் கொள்வார்கள். இணையவழியில் யாரும் வாங்க முன்வரவில்லை என்றால் விளைந்த பொருளை தனியாரிடம் அடிமாட்டு விலைக்குதான் விவசாயி விற்க வேண்டும். அதற்கும் வழி இல்லை என்றால் சாலையில்தான் கொட்டவேண்டும்.
கொள்முதலை அரசு கைவிடுவதால் இனி தானியக் கிடங்குகள் இருக்காது. தானியக் கிடங்குகள் இல்லை என்றால் நியாய விலைக் கடைகளுக்கு பொருட்கள் கிடைக்காது. கார்ப்பரேட் முதலாளிகளிடம் இருந்து கூடுதல் பணம் கொடுத்து அரசு நியாயவிலைக் கடைகளை நடத்த முன் வருவதற்கான வாய்ப்பே கிடையாது. நியாயவிலைக் கடைகளை நம்பி உயிர் வாழும் 76 கோடி மக்களின் உயிர்வாழும் உரிமையை இந்த சட்டம் பறித்து விடுகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21 வழங்கியுள்ள உயிர்வாழும் உரிமைக்கு எதிரானது இந்தச் சட்டம்.
பணக்கார விவசாயிகள் அல்லது பண்ணையார்கள் வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். சிறு குறு விவசாயிகள் அப்படி செய்வது நடைமுறை சாத்தியமில்லை. அவர்கள் ஒரு சிலர் சேர்ந்து சங்கமானால் மட்டுமே ஒப்பந்தம் சாத்தியமாகும். அப்படிச் சங்கமாகும் போது அவர்களது சங்கம் பதிவு செய்யப் வேண்டும் என்கிறது சட்டம் (பிரிவு: 2). ஒருமுறை பதிவு செய்வதற்கான கட்டணம் அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதைப் புதுப்பிப்பதற்கான கட்டணம். இது ஒரு தனி செலவு அலைச்சல்.
விலை பொருளின் தரம், எப்பொழுது தர வேண்டும், விலை என்ன என்பதை எல்லாம் முன்கூட்டியே ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும் (பிரிவு:2-g, 3). விளைபொருளின் தரத்தை முன்கூட்டியே தீர்மானிப்பதற்கான அளவுகோல் என்ன? விலையைத் தீர்மானிப்பதற்கான அளவுகோல் என்ன? என்பது பற்றியெல்லாம் எந்த விளக்கமும் சட்டத்தில் இல்லை. ஒரு விளை பொருளின் தரம் விதையின் தன்மை, மண்ணின் தன்மை, நீர், உரம், பூச்சி மருந்து, வறட்சி வெள்ளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மாறுபடும். அப்படி இருக்க முன்கூட்டியே தரத்தைத் தீர்மானிப்பது இறுதியில் விவசாயிக்குத்தான் பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஒப்பந்தப்படி வேளாண்மை நடைபெறுகிறதா என்பதை இடையில் ஒரு மூன்றாம் நபரை வைத்துச் சான்றிதழ் பெற வேண்டும் (பிரிவு: 4). இதற்கான செலவு யார் தலையில் விழும்?
விளை பொருளைத் தரும்பொழுது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில் மாற்றம் ஏற்பட்டால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி தொகையைக் கொடுக்க வேண்டும். வெளிச் சந்தையில் கூடுதல் விலை போகும் பட்சத்தில் அந்த கூடுதல் தொகையை தீர்மானிப்பதற்கான அளவுகோலாக அரசின் குறைந்த பட்ச ஆதார விலை அல்லது இணையவழி சந்தையில் விலை நிலவரம் ஆகியவற்றை வைத்து தீர்மானிக்க வேண்டும் என்கிறது சட்டம் (பிரிவு: 5). அவ்வளவு சுலபமாக ஒப்பந்தம் போட்ட முதலாளிகள் கொடுத்து விடுவார்களா என்ன? இந்தப் பஞ்சாயத்தை யார் தீர்ப்பது? கடைசியில் நட்டம் என்னவோ விவசாயிக்குதான்.
விளைபொருளை விளைந்த இடத்திலேயே வந்து ஒப்பந்தம் செய்து கொண்டவர் சோதனை செய்த பிறகு எடுத்துச் செல்ல வேண்டும். விதைக்கான ஒப்பந்தம் என்றால் பொருளை பெற்றுக் கொண்டவுடன் மூன்றில் இரண்டு பங்குத் தொகையை உடனே செலுத்தி விட வேண்டும். மீதித் தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மற்ற விளை பொருட்களுக்கு பொருளைப் பெற்றுக் கொண்ட உடனேயே முழுத் தொகையையும் செலுத்தி விட வேண்டும் (பிரிவு: 6). ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி தரம் இல்லை என்று சொல்லி பொருளை எடுத்துச் செல்லவோ அல்லது பணத்தைத் தர மறுக்கவோ அல்லது பணத்தை தர தாமதிக்கவோ எல்லா சாத்தியக்கூறுகளும் உண்டு. இந்தச் சூழல் ஏற்பட்டால் நட்டம் என்னவோ மீண்டும் விவசாயிக்குத்தான்.
ஒப்பந்த விவசாயத்தில் வாங்கும் விளைபொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் வியாபாரிகள் இருப்பு வைத்துக்கொள்ள முடியும். அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்புச்சட்டம் இங்கே செல்லுபடியாகாது (பிரிவு: 7). இந்தச் சட்டப்பிரிவு நேரடியான பதுக்கலுக்கு வழிகோலுகிறது.
தரம், விலை உள்ளிட்டவைகளில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடைமுறை விளைபொருள் ஊக்குவிப்புச் சட்டத்தில் உள்ளது போலவே வருவாய் கோட்டாட்சியரிடம் மனு, விசாரணைக் குழு, 30 நாட்களுக்குள் உத்தரவு, மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு-30 நாட்களுக்குள் உத்தரவு, உத்தரவுகள் உரிமையியல் நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது ( பிரிவு: 14), உரிமையில் நீதிமன்றத்தில் வழக்குகள் போட முடியாது (பிரிவு:18,19), மாநிலச் சட்டங்கள் செல்லாது (பிரிவு:20) உள்ளிட்ட அம்சங்கள் இதிலும் உள்ளன.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்
சட்டத்தின் அட்டவணையில் மொத்தம் 7 வகையான பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் என சட்டம் குறிப்பிடுகிறது. அதில் மாற்றம் செய்து தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை இனி அத்தியாவசியப் பொருள்கள் கிடையாது என்று 1(A) என்ற சட்டப்பிரிவை பிரிவு 3 ல் சொருகி உள்ளது மோடி அரசு. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை கார்ப்பரேட் முதலாளிகள் பதுக்கி வைப்பதற்கு வழிவகை செய்துள்ளது இச்சட்டத் திருத்தம். கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் கருப்புச் சந்தைக்கு மட்டுமே இச்சட்டத் திருத்தம் பயன்படப் போகிறது. வெங்காயம் திங்காத சொரணையற்றவர்கள் நம்மை உரசிப் பார்க்கிறார்கள்.
இனி இடைத்தரகர்கள் இருக்கமாட்டார்கள். காவிகளே கார்ப்பரேட்டுகளுக்கு முழுத் தரகர்களாக மாறிய பிறகு இடைத்தரகர்களுக்கு என்ன வேலை? பத்து ரூபாய்க்கு உருளைக்கிழங்கை வாங்கி இருநூறு ரூபாய்க்கு விற்பனை செய்து கோடி கோடியாய் கொள்ளை அடிப்பார்கள்.
இரயில், விமானம், வங்கி, உற்பத்தி, காப்பீடு என பல்வேறு துறைகளில் சுய சார்பாய் இருந்த நம்மை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைத்தார்கள். எஞ்சி நிற்கும் விவசாயிகளை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?
இது விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல உணவு உட்கொள்ளும் அனைவரின் பிரச்சனை. உயிர் வாழும் உரிமை பற்றிய பிரச்சனை. இனி வாழ்வா? சாவா? முடிவு செய்!
பொன்.சேகர்
வழக்குரைஞர்
தொடர் காத்திருப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள்! - JAAC
4/12/2020 நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பங்கேற்பார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்கள் கூட்டுக்குழுவின் பொதுக்குழு கூட்டம் இணையம் வழியாக கடந்த 12.12.2020 அன்று நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் 14.12.2020 அன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுடன் நமது வழக்கறிஞர் சங்கங்கள் பதாகைகளுடன் கலந்துகொண்டு ஒற்றுமையை பறைசாற்ற வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் வரும் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்கள். என்ன செய்யப்போகிறோம்?
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களுடன் நேர்காணல்.
நன்றி: Liberty tamil
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமக ராமதாஸ் நடத்திய நாடக அரசியல் குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களுடன் ஒரு நேர்காணல்.
நன்றி: Liberty tamil
வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்களின் காணொளி.
நன்றி: Arakalagam tv
நண்பர்களே,
"நிவர் புயல்" - பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. ஏற்கனவே கொரானா மீட்பு பணியில் ஈடுபட்ட சென்னை மக்கள் உதவிக்குழு, வடசென்னை மக்கள் உதவிக்குழு, வியாசை தோழர்கள் உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முதற்கட்டமாக நமது தோழர்கள் வசிக்கும் பகுதிகள் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப்பணிகளில் ஈடுபடுவது என்றும் குறிப்பாக வியாசை மற்றும் வடசென்னை பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை ஒருங்கிணைக்கும் வகையில் 9 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
PS, NN, Sarath ஒருங்கிணைக்க பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளனர்.
*உடனடியாக திட்டமிட்ட வேலைகள்*
1. அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வது,
2.அத்தியாவசியமான நிவாரண உதவிகளை வழங்குவது
3. உதவி எண்கள் அறிவிப்பது
4. உதவிப்பணிகளுக்கு நிதி திரட்டுவது
5. நாளை காலை 9 மணிக்கு கள ஆய்வு செய்வது,
என்ற வகையில் தற்போது திட்டமிட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிலைமைகளையொட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல்
அருந்ததி ராய் புத்தகம் மீண்டும் பாட திட்டத்தில் சேர்ப்பா? மனோன்மனியம் பல்கலை. துணை வேந்தர் விளக்கம்
#குறிப்பு : அருந்ததிராய் புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் இணைத்ததாக வந்த தகவல்களை ஒட்டி, நாம் ஒரு பதிவை இன்று காலையில் வெளியிட்டோம். இப்பொழுது பிபிசியில் (ஒரு மணி நேரத்திற்கு முன்பு) வந்த செய்தி துணைவேந்தர் மறுத்து சொன்ன செய்தி வெளியாகியிருக்கிறது.
ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நமது போராட்டத்தையும், பிரச்சாரத்தையும் மக்களிடம் கொண்டு செல்வோம்.
****
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாட திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததி ராயின் 'Walking With The Comrades' புத்தகத்தை மீண்டும் சேர்ப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார்.
அருந்ததி ராயின் புத்தகம் கடந்த 11-ம் தேதி பாட திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அந்தப் புத்தகம் மாணவர்களிடையே தவறான கருத்துகளைப் பரப்புகிறது என்பதால் அதை நீக்க வேண்டும் என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
அந்த அமைப்பின் அழுத்தம் காரணமாகவே புத்தகம் பாட திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். ஆனால் அந்த கருத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி மறுப்பு தெரிவித்திருந்தார். மாணவர்கள் நலன் கருதியே புத்தகம் நீக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த வாரம் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர், சில மாணவர்களை மட்டும் துணைவேந்தரைச் சந்திக்க ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமையில் சில மாணவர்கள் மட்டும் துணைவேந்தரைச் சந்தித்தனர். அப்போது நீக்கப்பட்ட புத்தகத்தை மீண்டும் சேர்க்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அது மட்டுமின்றி கடந்த வாரத்தில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் துணைவேந்தரைச் சந்தித்து மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் 'Walking With The Comrades' புத்தகம் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டதாக புதன்கிழமை தகவல்கள் வெளிவந்தன. சில தொலைக்காட்சிகளிலும் அந்த செய்தி ஒளிபரப்பாயின.
அந்த செய்தியைப் பார்த்த அருந்ததி ராய் நன்றி தெரிவிப்பதாகக் கூறும் அறிக்கையும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
இந்த அறிக்கை தொடர்பாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் கேட்ட போது 'கடந்த 23-ம் தேதி நடந்த பாடத்திட்டத் தேர்வுக் குழுக் கூட்டத்தின் போது அருந்ததி ராயின் புத்தகத்தை மீண்டும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எங்களுக்கு கிடைத்த உறுதியான தகவல்களுக்குப் பின்னரே எங்கள் அமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது' என்று கூறினார்.
பல்கலைக்கழகத்தின் முடிவு அருந்ததிராயின் கவனத்துக்கும் சென்றிருக்கிறது. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட பின்னரும் அது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் எங்கள் அமைப்பின் அறிக்கைக்கோ, அருந்ததி ராயின் அறிக்கைக்கோ துணைவேந்தர் இன்னும் மறுப்பு தெரிவிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே பாடத்திட்டத் தேர்வுக் குழுவின் முடிவைப் பற்றி துணைவேந்தர் வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும்' என்று ஆதவன் தீட்சண்யா தெரிவித்தார்.
இது தொடர்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிச்சுமணியிடம் கேட்ட போது இது தொடர்பாக தற்போது வெளியாகும் தகவல்கள் தவறானவை என்று கூறினார். பாட திட்டத் தேர்வுக் குழுக் கூட்டத்தின் போது இது பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், அருந்ததி ராயின் புத்தகத்தை மீண்டும் சேர்ப்பது தொடர்பான கோரிக்கை இன்னும் பரிசீலனை அளவிலேயே உள்ளது என்றும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
- BBC NEWS
https://www.bbc.com/tamil/india-55074700
முன்பு வெளியான தகவல்
பாடத்திட்டத்தில் மீண்டும் ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’: அருந்ததிராய் நன்றி!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் மீண்டும் அருந்ததி ராயின் நூல் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் வெளியிட்டுள்ள அறிக்கை:
“திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘ வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்ற எனது நூலை மீண்டும் அதன் பாடத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருப்பதாக அறிந்தேன்.
தனிநபர்கள், அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் முன்னெடுத்த பொது விவாதம் இல்லாமல் இது ஒருபோதும் நடந்திருக்க முடியாது. அறிவுபூர்வமாக முதிர்ச்சியடைந்த சமூகங்கள், மக்கள், நாடுகள் இப்படித்தான் துடிப்பாக மற்றும் உயிரோட்டமாக இருக்க முயற்சிக்கின்றன.
புத்தகத்திற்காகப் பேசிய அனைவருக்கும் மற்றும் எம்.எஸ் பல்கலைக்கழகத்திற்கும், அழுத்தத்துக்கும், மிரட்டலுக்கும் பணியாமல் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்த பல்கலைக்கழகத்துக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். "
-அருந்ததி ராய்
நன்றி: Gunaa Gunasekaran
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை:
ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலைத் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதை தொடர்ந்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று 16.11.2020 நீதிபதிகள் நவீன் சின்ஹா மற்றும் கே.எம். ஜோசஃப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் முகுல் ரோதங்கி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
அதில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஸ்டெர்லைட் ஆலை மீறியதாக கூறப்பட்ட பல விதிமீறல்கள் சரிசெய்யப்பட்டுவிட்டன. இன்னும் மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்து ஆலையைத் திறக்க அனுமதி கொடுத்தால் அனைத்து நிபந்தனைகளும் சரி செய்யப்படும் என்றும், பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும் எனவும், இந்திய காப்பர் உற்பத்தியை கணக்கில் எடுத்துகொண்டு பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்;அதற்கேற்ற பொருத்தமான வடிவில் குறைந்த பக்க அளவில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக வாதிட்டார். மேலும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தங்கி, விசாரணை ஆணையம் அமைத்துதான் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வாதிட்டார்.
அதற்கு எதிராக அரசு தரப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ் . வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் காலின் கொன்சால்வேஸ், வழக்கறிஞர் சபரீஷ் ஆகியோர் ஆஜராகி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது, சுற்றுப்புறச்சூழலை மாசு படுத்தியதால் தமிழக அரசு நிரந்தரமாக அந்த ஆலையை மூடியது, பின்னர் விரிவான விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் ஆலையை நிரந்தமாக மூடியதை ஏற்று இறுதித் தீர்ப்பு வழங்கியது என்று வாதிட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பே இல்லை என்று அரசு தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யட்டும், இருதரப்பு வாதத்தையும் கேட்ட பிறகே இடைக்கால தீர்ப்பு தேவையா என்பதை முடிவு செய்வோம் என்று தெரிவித்து, டிசம்பர் மாதம் முதல்வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
- சு . ஜிம்ராஜ் மில்ட்டன்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்