Tuesday, 27 April 2021

ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது சரியா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒப்புதல் தெரிவித்திருப்பது தூத்துக்குடி மக்களிடம் மட்டுமல்ல தமிழக மக்களிடையேயும் ஓர் அதிர்ச்சிப் பேரலையை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு மோடியும் எடப்பாடியும்தான் முக்கியக் காரணம் என்றாலும்கூட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல என்பதை அம்பலப்படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள்.


நன்றி: Arakalagam

குவியும் பிணங்கள்! கதறும் மக்கள்! மோடியின் கையாலாகாத்தனம்!

கரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை இந்தியாவையே உலுக்கி வருகிறது. நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், வரும் நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவும் சூழலில், நோய்த் தொற்றுக்கு ஆளானோர் சுவாசிக்க பிராணவாயுகூட இல்லாமல் வட இந்தியாவில் பிணங்கள் குவிகின்றன. இராமனுக்குக் கோவில் கட்டினால் போதாது; கொத்துக் கொத்தாய் மடியும் மக்களைக் காக்க குறைந்தபட்ச மருத்துவ வசதியைக்கூட செய்யத்தவறிய கையாலாகாத மோடியின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிடுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் ‌‌‌‌‌அவர்கள்


நன்றி: கருஞ்சட்டைப் படை

.

Sunday, 18 April 2021

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக-வினருக்கு அருகதை உண்டா?

தான் இறக்கும் போது ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் என்று சூளுரைத்து பௌத்தத்தைத் தழுவிய டாக்டர் அம்பேத்கர், இந்து மதக் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் ஈவிரக்கமின்றிச் சாடியவர். இந்து மதத்திற்கு எதிராகக் களமாடிய அம்பேத்கரைக் கொண்டாட இந்துத்துவவாதிகளுக்கு என்ன அருகதை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பி 14.04.2021 அன்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற பாஜக-வினரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஓட ஓட விரட்டி அடித்தனர்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக-வினருக்குத் தகுதி இருக்கிறதா எனக் கேள்வி எழுப்புகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன். அவரது விரிவானக் காணொளி இதோ.... 

நன்றி: Arakalagam tv


Wednesday, 14 April 2021

எடப்பாடியின் தாயாரை அ.ராசா இழிவுபடுத்தினாரா?

தேர்தல் பரப்புரையின் போது எடப்பாடியின் தாயாரை திமுக-வின் அ.ராசா இழிவுபடுத்தினாரா? 

சோனியாவை ஜெர்சி பசுனு சொன்னது யாரு ? பொள்ளாச்சி சம்பவம் மோடி பதில் சொல்வாரா?

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் தெளிவுபடுத்துகிறார்.


நன்றி-Arakalagam tv

Monday, 22 March 2021

மதுரையில் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கம்!

ஒரு பக்கம் கோடையின் வெக்கை; கரோனா இரண்டாவது அலையின் அச்சுறுத்தல். மறுபக்கம் கார்ப்பரேட் காவிப் பாசிசம் எனும் அரசியல் கரோனா. இது முன்னெப்போதைக் காட்டிலும் கொடும் பெரு நெருப்பைக் கக்கத் தேர்தல் எனும் சாரதியில் தன்பரிவாரங்களோடு படையெடுத்து வருகிறது.

பருவகாலத் தொல்லைகளும், பெருந்தொற்று இழப்புகளும் தற்காலிகமானவைதான்; சிறிது விலை கொடுத்தாலும் நம்மால் எளிதாய் பழைய நிலைக்கு மீண்டுவிட முடியும். ஆனால் காவிப் பாசிசம் எனும் அரசியல் கரோனா நம்மைக் கவ்விவிட்டால், அழிவு ஒன்றைத் தவிர வேறு எதுவும் மிஞ்சாது. சிறு துரும்பெனினும் கிடைத்ததைக் கொண்டு நம்மைத் துரத்தும் காவிப் பாசிசம் எனும் அரசியல் கரோனாவை குறைந்தபட்சம் தட்டிவிடக்கூட முயலவில்லை எனில் இளைப்பாறக்கூட வழியின்றி நாம் வீழ்த்தப்படுவோம். எனவே நாம் இன்று விழித்தெழ வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பெரியாரிய-அம்பேத்கரிய-மார்க்சிய கருத்தியலைக் கண்டு தமிழகத்தில் தனது வாலை நுழைக்க அஞ்சிய பார்ப்பனியம், இன்று சாதி-மத-பிழைப்புவாதக் கூட்டங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு அதிமுக-பாஜக-பாமக கூட்டணி என்ற பெயரில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகக் களத்தில் இறங்கி உள்ளது. தமிழ்த் தேசியம்-ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் நாம் தமிழர்-மக்கள் நீதி மய்யம் மற்றும் ‘அம்மாவின்’ பெயரில் தமிழகத்தையே ஆட்டயப் போட்ட தினகரன் வகையறாக்கள் காவிகளின் வாலாக தனித்தனியாகக் களம் காண்கின்றனர்.

அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. நாட்டின் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க காடுகள் கார்ப்பரேட்டுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. ஹைட்ரோ கார்பன்-மீத்தேன், எட்டுவழிச் சாலை என எண்ணற்ற திட்டங்கள் கார்ப்பரோட்டுகளின் நலனைக் காப்பதற்காகத் தீட்டப்படுகின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டங்கள், வேளாண் திருத்தச் சட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள், மின்சாரத் திருத்தச் சட்டம், காஷ்மீருக்கான 370 நீக்கம் என எண்ணற்ற மக்கள் விரோதச் சட்டங்கள் நாளும் அரங்கேறி வருகின்றன.

ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே சட்டம் என்ற போர்வையில் சிறுபான்மை மக்களின் மொழி, உணவு உள்ளிட்ட பண்பாட்டு உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன. மாட்டிறைச்சி வைத்திருந்தற்காக இஸ்லாமிய மற்றும் தலித் சிறுபான்மை மக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்படுகின்றனர்.

அரசின் மக்கள் விரோத் திட்டங்களையும், சட்டங்களையும், செயல்பாடுகளையும் எதிர்த்துக் கேள்வி எழுப்பும் சமூகச் செயற்பாட்டாளர்கள் ‘ஊபா’ (UAPA)-தேசியப் புலனாய்வு முகமைச் (NIA) சட்டங்கள் மூலம் கைது செய்யப்பட்டு ஆண்டுக் கணக்கில் சிறை படுத்தப்படுகின்றனர். படுகொலை செய்யப்பட்ட போராளிகளின் இறுதி நிகழ்வில் பங்கேற்பவர்கள்கூட ‘ஊபா’ சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். ஒரு கொடியப் பாசிச காட்டாட்சியை நோக்கி இந்தியா இழுத்துச் செல்லப்படுகிறது.

கார்ப்பரேட் காவிப் பாசிஸ்டுகளின் கொடும் பற்கள் நம்மைக் கடித்துக் குதர துரத்திக் கொண்டு வருகிறது. தேர்தல் மூலம் அவர்களை நம்மால் முற்றிலுமாக விரட்டிவிட முடியாது என்றாலும், நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவாவது அவர்களின் வேகத்தைிற்குத் தடை ஏற்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்தத் தேர்தல் தமிழக மக்களுக்கு வாழ்வா சாவாப் போராட்டம். இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட யார் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆம்! வீழ்த்தப்பட வேண்டியர்கள் கார்ப்பரேட்-காவி பாசிஸ்டுகளின் நேரடிக் கூட்டாளிகளான பாஜக-அதிமுக-பாமக கூட்டணியும் மற்றும் திரைமறைவில் காவிகளின் பினாமிகளாக உலாவரும் சீமானின் நாம் தமிழர்-கமலின் மக்கள் நீதி மய்யம் மற்றும் தினகரனின் அமமுக-வினருமே என்பதை தமிழக மக்கள் கவனத்தில் கொண்டால் குறைந்தபட்சம் தமிழகமாவது தப்பிக்கும்.

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை சார்பாக 21.03.2021 அன்று மாலை மதுரையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பேராசிரியர் அ.சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் தொடக்க உரை நிகழ்த்தினார்.

“பாசிசமா? ஜனநாயகமா? விழித்தெழு தமிழகமே!” என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களும், “பாசிசத்தின் ஆயுதமாக ‘ஊபா’ (UAPA)-எதிர் கொள்வது எப்படி?”  என்ற தலைப்பில் பெங்களூரு உயர்நீதி மன்ற வழக்குரைஞர் எஸ்.பாலன் அவர்களும் சிறப்புரையாற்றினர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் தலைமையிலான கலைக்குழுவினர் எழுச்சிகரமானப் பாடல்களைப் பாடி கலை நிகழ்சிகள் நடத்தினர். இறுதியாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் லயனல் அந்தோனி ராஜ் அவர்கள் நன்றி கூறினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இக்கருத்தரங்கம் உரிய நேரத்தில் சரியானக் கருத்தைத் தமிழக மக்களுக்கு உணர்த்தியுள்ளது என்றே கருதுகிறோம்..


செய்தித் தொகுப்பு
பொன்.சேகர்

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை

அ.சீனிவாசன்

சே.வாஞ்சிநாதன்

லயனல் அந்தோனி ராஜ்


மதுக்கூர் இராமலிங்கம்




எஸ்.பாலன்






Wednesday, 17 March 2021

அதிமுக தேர்தல் அறிக்கை மோசடி!

தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வை ஆதரிக்கும் தமிழர் விரோத அதிமுக வையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் என்ன செய்யப் போகிறோம்?

நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் தமிழர்களுக்கான வாழ்வா சாவாப் போராட்டம்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் செய்ய வேணடியது என்ன? தெளிவுபடுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்த்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன்.


நன்றி: அறக்கலகம் டிவி

Saturday, 6 March 2021

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு! நீதியா? சமூக அநீதியா?

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு! 

எடப்பாடி இராமதாஸ் பிஜேபி செய்வது நீதியா? சமூக அநீதியா?

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் உரை.


நன்றி

அறக்கலகம் டிவி

விவசாயிகள் போராட்டம்! 100 - வது நாள்: திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

திருச்சி

அன்பார்ந்த வழக்கறிஞர்களே, பொதுமக்களே,

மக்களின் உணவு உண்ணும் உரிமைக்காக டில்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கு மேலாக பன்னாட்டு நிறுவனங்களின் கைக் கூலி மோடி - பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அப்போராட்டத்தை ஆதரித்துக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 06.03.2021-ம் தேதி சனிக்கிழமையன்று காலை 10:30 மணியளவில் திருச்சி நீதிமன்ற வாயில் முன்பு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ப.முருகானந்தம் தலைமையில் நடந்தது. வழக்கறிஞர்கள் போஜக்குமார், ஆதிநாராயணமூர்த்தி, தாஜுதீன், சங்கர், கென்னடி, பானுமதி, பர்சானா, யாசர், சாருவாகன், ராமச்சந்திரன், கலைச்செல்வி, அரிச்சந்திரன், ஜாகீர், கிளர்ச்சியாளன், பிரசாத், சாகுல், ஆனந்தநாராயணன், ஜீவா, வினோத் மற்றும் தோழர்கள் செந்தில், சபி, கார்த்திக் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கார்பரேட் கைக் கூலி மோடி - பா.ஜ.க-வினரையும் ஜால்ரா போடும் எடப்பாடியையும் விரட்டியடிக்க வேண்டுமென்று முழக்கமிட்டனர்.




தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருச்சி 

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் தொடர் போராட்டம் 100-ம் நாளை எட்டி உள்ள நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 06.03.2021 அன்று முன்னெடுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடும் பொருட்டு திருச்சி நீதிமன்றத்தில் 05.03.2021 அன்று பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.



தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருச்சி 

Wednesday, 27 January 2021

டிராக்டர் பேரணியில் அரசு வன்முறை!

 டிராக்டர் பேரணியில் அரசு திட்டமிட்டே வன்முறையைத் திணிக்கிறது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் காணொளி.

நன்றி: arakalagam tv

Wednesday, 13 January 2021

முகநூல் நட்புகளுக்கு ஓர் வேண்டுகோள்!

PRPC தோழர்களுக்கு,

நமது முகநூல் தொடர்பாக!

வணக்கம்.  நமது ”மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்” சார்பாக “ *People’s Right Protection Centre, Tamil Nadu”* என்ற பெயரில் சில வருடங்களாக முகநூலில் ஒரு பக்கத்தை (Page) தொடங்கி  தொடர்ந்து பதிவிட்டுவருகிறோம். இதில் மனித உரிமை மீறல் தொடர்பான செய்திகள், நமது அமைப்பு பல்வேறு பகுதிகளில் முன்னெடுத்து வரும் மக்கள் பணிகளையும், பொதுநல வழக்கு குறித்த செய்திகளையும், பொதுவான செய்திகளையும் தொடர்ந்து பதிவிட்டுவருகிறோம்.    இதுவரை *13356* பேர் நமது பக்கத்தை பின்தொடர்பவர்களாக ( *Followers* ) இருக்கிறார்கள்.  ஒவ்வொரு மாதமும் *இரண்டு லட்சம்* , சில சமயங்களில் *நான்கு லட்சம்* பேருக்கு மேலாக நமது பதிவுகள் சென்றடைகின்றன. 

தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதால் சங்கிகள் கடுப்படைகிறார்கள். நமது பக்கத்தை முகநூல் நிர்வாகத்திற்கு அவ்வப்பொழுது  புகார் தருகிறார்கள்.   முகநூல் நிர்வாகமும் பதிவுகளின் தன்மை குறித்து எல்லாம் ஆய்வதில்லை.  நாலைந்து பேர் புகார் அளித்துவிட்டால், பதிவுகளை முடக்குவது! நமது பக்கத்தை முகநூலில் இயங்கிவரும் குழுக்களில் பகிர தடை செய்வது, நமது பக்கத்திலேயே பதிவுகள் இட சில நாட்களுக்கு தடை என விதவிதமாய் யோசித்து நம்மை முடக்க நினைக்கிறார்கள். டிசம்பரில் கூட நமது பக்கத்தை சில நாட்களுக்கு முடக்கி வைத்துவிட்டார்கள்.  சில ஏற்பாடுகளை செய்து, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் இயங்க துவங்கியிருக்கிறோம்.  

சங்கிகளின் புகார்கள் மட்டுமல்ல! முகநூல் நிர்வாகமே ஆளும் கட்சியாக இருக்க கூடிய பா.ஜனதா சார்பான நிலை எடுத்து விட்டதாக சமீபத்திய செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.  ஆகையால் நாம் முகநூலில் தொடர்ந்து இயங்கவேண்டுமென்றால், நாம் சில முன்னேற்பாடுகளை செய்யவேண்டியிருக்கிறது.   இனி நமது பக்கத்தில் மட்டும் நமது பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வருவது! நாம் அங்கம் வகிக்கும் குழுக்களில் நமது பதிவுகளை பகிர்வது இல்லை என முடிவுக்கு வருகிறோம்.  இப்படி ஒரு முடிவு எடுக்கும் பொழுது, நமது பதிவுகள் பரவலாக சென்றடையாது. ஏனென்றால், நாம் அங்கம் வகிக்கும் குழுக்களில் ஒரு குழுவில் 4000 பேரும் உண்டு. இன்னொரு குழுவில் 70000 பேர் கூட உண்டு.   குழுக்களில் நாம் பகிரும் பொழுது தான் நமது பதிவுகள் பல ஆயிரம் பேரை சென்றடையும். 

ஆகையால், முகநூலில் இயங்கி வரும் தோழர்களிடம் கோருவதெல்லாம், *நாம் போடும் பதிவுகளை தோழர்கள் தங்களது டைம்லைனில் (Share) பகிருங்கள். ஏதாவது குழுவில் இருந்தால், அந்த குழுவிலும் பகிருங்கள்.  அப்பொழுது தான் நமது கருத்துக்கள் மக்களை பரவலாக சென்றடையும்* .   

இப்படி பகிருந்தால், மீண்டும் நம் மீது புகார் தெரிவிக்கமாட்டார்களா என கேள்வி எழுந்தால், வரும். அதை நாம் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்.

வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும், கேளுங்கள். விவாதிப்போம். 

நன்றி.

தோழமையுடன்,

ஜிம்ராஜ் மில்டன்,
வழக்கறிஞர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை.

டெல்லி முற்றுகை: வன்முறை ஏற்படுத்தச் சதி?

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் அமைதியானப் போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த சதி நடப்பதாகக் குற்றம் சுமத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். மேலும் விவரங்களுக்கு காணொளியைப் பாருங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

நன்றி 

 Aadhan




வேளாண் சட்டங்கள்: இடைக்காலத் தடை தீர்வாகுமா?

மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டம் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதைப் போன்றதொருத் தோற்றத்தை ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன. உண்மையில் சட்டங்களுக்குக் இடைக்கால தடை விதிக்கப்படவில்லை, மாறாக சட்ட அமுலாக்கத்திற்கு மட்டுமே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் காணொளி. பாருங்கள்! பகிருங்கள்! 

நன்றி: Arakalagam tv


Tuesday, 29 December 2020

பா.ஜ.க குறித்து அதிமுக தலைவர்களின் தேர்தல் அரசியல் நாடகம்!

பா.ஐ.க பற்றி அதிமுக தலைவர்களின் நாடகம்: மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களின் காணொளி‌ பாருங்கள்! பரப்புங்கள்!

 நன்றி: arakalagam tv