Friday, 22 May 2020

PRPC சார்பில் ஸ்டெர்லைட் தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சிப் பதிவுகள்.

தூத்துக்குடி
மாவட்ட அமைப்பாளர் அரிராகவன்
மதுரை
மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன்

மாவட்டச் செயலாளர் லயனல் 


திருச்சி
மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம்

சென்னை

மாவட்டச் செயலாளர் ஜிம்ராஜ் மில்டன்

தகவல் 
மக்கள்  உரிமைப் பாதுகாப்பு மையம்


காசியும் அவன் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் தண்டிக்கப்பட வேண்டும்!

நாகர்கோவில் காசி, பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், திருமணம் ஆகாத இளம்பெண்கள், திருமணமான பெண்கள் என சுமார் 100 பெண்களை திட்டமிட்டு ஏமாற்றியதால் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். பாதிக்கப்பட்டப் பெண் மருத்துவர் ஒருவர் தைரியமாகப் புகார் கொடுத்ததன் அடிப்படையில் இன்று காசியும் அவனது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காசியோடு இந்த அயோக்கியத்தனத்தில் இன்னும் பலருக்குத் தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று இந்த அயோக்கியத்தனத்தில் காசியுடன் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். காசியுடன் இந்த அயோக்கியத்தனத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக புகார் அளிக்க வேண்டும், அவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தினர் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அயோக்கியர்கள் அனைவரும் தண்டிக்கப்படவும், இதுபோன்ற அயோக்கியத்தனங்கள் மேலும் நடைபெறாமல் இருக்கவும் காசி உள்ளிட்ட அயோக்கியர்களால் பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் வழக்கு கட்டணம் வாங்காமல் அனைத்து விதத்திலும் சட்ட உதவி செய்யத் தயாராக இருக்கின்றோம்.

மேலும் பாதிக்கப்பட்டப் பெண்கள் தங்களுடைய பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் வெளியே தெரிய வேண்டாம் என்று கருதினால் அது குறித்த ரகசியம் காக்கப்படும்.

மேலும் இந்த வழக்கு விசாரணை முறையாக நடை பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் ஆரம்பம் முதல் இறுதிவரை இந்த வழக்கு விசாரணை நேர்மையான இயக்கங்கள், நேர்மையான வழக்குரைஞர்கள், நேர்மையான பத்திரிக்கையாளர்கள், உள்ளிட்ட பலராலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கோருகின்றோம்.

க. சிவராஜ பூபதி,
வழக்குரைஞர்,
நாகர்கோவில்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
தொடர்பு எண் - 9486643116.

அரசு தலைமை மருத்துவர்களுக்குக் கரோனா! மூடிமறைக்கும் தமிழக அரசு!

*ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 15 துறைகளின் முதன்மை மருத்துவர்களுக்குக் (Chief Doctors) கரோனா நோய்த்தொற்று உறுதி…!*
*பொதுவெளியில் தெரியப்படுத்தாமல் இருட்டடிப்பு செய்யும் தமிழக அரசு…!!*

27.03.2020 அன்று தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ்- கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கோரி PRPC சார்பில் (சு.ஜிம்ராஜ் மில்ட்டன்) பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தோம். அவ்வழக்கில் முன்னணிப் பணியாளர்களின் (Front line Workers) பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தக்கோரிய இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தோம்.

இந்த வழக்கில் 13.05.2020  மற்றும் 16.05.2020 தேதிகளில் அரசு தரப்பிலிருந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த  அறிக்கைகளிலும் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட மருத்துவ மனைகளின் எண்ணிக்கை,  மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை, Personal Protective Equipment (PPE) எனப்படும் பாதுகாப்பு உபகரணங்கள்,  அரசினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த எந்தவித தகவல்களும் இல்லை.

அவ்வறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக 18.05.2020 அன்றைய விசாரணையில் நாம் மறுப்பு அறிக்கையை  (Objections) தாக்கல் செய்தோம். அதில் PPE குறித்து WHO, தேசிய நோய்த் தடுப்பு மையம் (NCDC), சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றில் கொடுத்த விளக்கத்தைக் குறிப்பிட்டு, அரசு மருத்துவர்களுக்குக் கொடுத்தது PPE Kit – டே கிடையாது, அது வெறும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மேலுடைதான் (Surgical Apron) என்று குறிப்பிட்டிருந்தோம்.
10.05.2020 அன்று 37 மருத்துவர்கள் உட்பட மொத்தம் 112 சுகாதாரப்  பணியாளர்களுக்குக் கரோனா உறுதியாகியிருப்பதை குறிப்பிட்டு கூடுதலாக COVID அல்லாத பிற நோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் பிற பிரிவு மருத்துவர்களுக்கும் (Surgery, Maternity Ward, etc) நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் முறையான பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனை, தனிமைப்படுத்தல் (Quarantine) வழங்கக்கோரியிருந்தோம்.

இந்த நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் Pediatrician (2), Radio diagnostic (2), Surgery (1), Medicine (2), Dermatologist (1) உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 15 முதன்மை மருத்துவர்களுக்கு (Chief Doctors) கரோனா நோய்த்தொற்று உறுதியாகியிருக்கும் செய்தி நமக்குக் கிடைத்துள்ளது.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த Dr.ரவீந்திரன் மற்றும் Dr.சாந்தி ஆகியோர்  இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் 15 முதன்மை மருத்துவர்கள் நோய்த்தொற்று குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல் தமிழக அரசால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

கரோனா பிரிவில் நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சையளிக்காத முதன்மை மருத்துவர்களுக்கே இந்த நிலை எனும்பொழுது, அடுத்த நிலையிலுள்ள நேரடி சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப்பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்களின்  நிலை கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் ராயபுரம் அரசு பிரசவ மருத்துவமனையில் 47 கர்ப்பிணிப் பெண்களுக்குக் கரோனா நோய்த்தொற்று உறுதியாகியிருப்பதும் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் போல, மருத்துவமனை நோய்த்தொற்றின் மையப் பகுதியாக (Hotspot) இருக்கிறது.

எனவே தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் High Risk Zone (அ) Moderate Risk Zone என மட்டுமே தரம் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப பாதுகாப்பு வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். Low Risk Zone என்று வகைப்படுத்தக்கூடாது.

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கப்படும் நிலையில், மருத்துவமனைகள்தான் கரோனா நோய்த்தொற்றை தீவிரமாக எதிர்த்துப் போராடும் மையப்பகுதியாகிறது.

அவர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகும் பட்சத்தில் நிலைமை மேலும் தீவிரமாகக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த அபாய நிலையை உணர்ந்து தமிழக அரசானது, கரோனா வார்டு மருத்துவ பணியாளர்களுக்கும் மற்றும் கரோனா அல்லாத பிற துறை (Other Departments) வார்டுகளில் நேரடி சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் முறையான PPE kit கள், தனிமைப்படுத்தல், பரிசோதனை செய்வதோடு, கரோனா நோய்தொற்று இல்லாத பிற  நோயாளிகளுக்கும் பரிசோதனையை உடனே செய்யவேண்டும்.

மேலும் துவக்கத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதியான மருத்துவர்கள் குறித்து வெளிப்படையாக அறிவித்து வந்தது போலவே தினசரி செய்திக்குறிப்பில் (Daily Bulletin) மருத்துவர்கள் நோய்த்தொற்று குறித்தும் தனி அட்டவணை வெளியிடவேண்டும்.

*முன்னணிப்  பணியாளர்களின் இந்த அவல நிலைக்குத் தீர்வு காண, அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்ப வேண்டும்*.

- *வழக்கறிஞர்*
*சு. ஜிம்ராஜ் மில்ட்டன்*
சென்னை கிளை செயலாளர் –
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தொடர்புடைய பதிவுகள்


Thursday, 21 May 2020

ஸ்டெர்லைட் படுகொலை: நீதி எங்கே?

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்  சூடு 2 ஆம் ஆண்டு‌. நீதி எங்கே?

நாட்டைக் கூறுபோட்டு விற்பதுதான் வளர்ச்சியா?

தனியார்களுக்கு தாரை வார்ப்பதுதான் சுயசார்பா..? 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் உரை


தொடர்புடைய பதிவுகள்

விஜய்சேதுபதி மீது பாயும் சங்கிகளுக்குச் சவுக்கடி.
டாஸ்மாக் : கரோனாவின் கொலைக்கூடம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

ஆண்டு 2
நீதி எங்கே?

ஸ்டெர்லைட்டை அகற்றும் வரை ஒரு அடி பின்வாங்க மாட்டோம்!

காலை வீட்டு வாசலில் கோலம் போடுவோம்!
தியாகிகள் படத்திற்கு மாலை போடுவோம்!
இரவு 7.00 மணிக்கு மெழுகு வர்த்தி ஏற்றுவோம்!

ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை போற்றுவோம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தூத்துக்குடி  கிளை அமைப்பாளர் வழக்குரைஞர் அரிராகவன் அவர்களின் அறைகூவல்.


*****
தூத்துக்குடி நினைவஞ்சலி










******
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் ஸ்டெர்லைட் ஈகியம் குறித்து உரையாற்றும் இணைய வழி கருத்தரங்கம் நேரலை. Byஇணைந்திருங்கள்.

 தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தொடர்புடைய பதிவுகள்

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள்: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி!




Tuesday, 19 May 2020

மருத்துவர்களின் பாதுகாப்பைக் காற்றில் பறக்க விடுகிறதா உயர் நீதிமன்றம்?

கரோனா சிகிச்சை - மருத்துவர்கள் பாதுகாப்பு உத்திரவாதப்படுத்தக் கோரிய வழக்கு ஒரு வாரம் தள்ளி வைப்பு:

27.03.2020 அன்று தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ்- கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கோரி PRPC சார்பில் வழக்குரைஞர் சு.ஜிம்ராஜ் மில்ட்டன் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தோம்.அதில் முன்னணிப் பணியாளர்களின் (Front line Workers) பாதுகாப்பு, பிற மாநில தொழிலாளர்கள் (Migrant Workers) வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தக்கோரி - இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தோம். வழக்கு 18.05.2020 அன்று விசாரணைக்கு வந்தது. நமது சார்பாக மூத்த வழக்குரைஞர் பாலன் ஹரிதாஸ் ஆஜராகி வாதிட்டார். மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் பார்த்தசாரதி உடனிருந்தார்.

கடந்த வாரம் விசாரணையின்போது, 13.05.2020 அன்று அரசு தரப்பிலிருந்து அறிக்கை (Status Report) தாக்கல் செய்தனர். நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் அறிக்கை முழுமையாக ல்லை என்பதால் முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

16.05.2020 அன்று அரசு தரப்பில் புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட மருத்துவ மனைகளின் எண்ணிக்கை, மருத்துவர்களின் எண்ணிக்கை, மருத்துவர்களுக்கு வழங்கப்படும் Personal Protective Equipment (PPE) எனப்படும் பாதுகாப்பு உபகரணங்களின் எண்ணிக்கை, சேமிப்பில் தயாராக உள்ள உபகரணங்களின் எண்ணிக்கை, அரசினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த எந்தவித தகவல்களும் இன்றி பொதுவான வழிகாட்டுதல்கள் மட்டும் இருந்தது.

மீண்டும் மற்றும் ஒரு அறிக்கையை 16.05.2020 அன்று அரசு தரப்பில் தாக்கல் செய்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக 18.05.2020 அன்று நாம் மறுப்பு அறிக்கையை (Objections) தாக்கல் செய்தோம். அதில் PPE குறித்து WHO, தேசிய நோய்த் தடுப்பு மையமும் (NCDC), சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிலும் கொடுக்கப்பட்ட விளக்கத்தைக் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி மருத்துவர்களுக்கு WHO குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்படி

(1st Layer – Surgical Apron,
2nd Layer – Gown,
3rd Layer – Coverall/Gown (Fluid Resistence),

மூன்றடுக்கு பாதுகாப்பு ஆடை கொடுக்கப்படவில்லை. மாறாக அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்டது PPE Kit – டே கிடையாது. அது வெறும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மேலுடைதான் (Surgical Apron) என்று குறிப்பிட்டிருந்தோம்.

கூடுதலாக பல மருத்துவர்களிடம் நேரடியாக உரையாடிப் பெற்ற நடைமுறை தகவல்களோடு, மருத்துவர் ரவீந்தரன் அவர்கள் மூலம் பிரமாண பத்திரத்தையும் (Supporting Affidavit) தாக்கல் செய்திருந்தோம்.  மொத்தம் 112 சுகாதாரப் பணியாளர்களுக்கும், 150 க்கும் மேற்பட்ட காவலர்களும், 27க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கும், இன்னும் பல முன்னணியாளர்களுக்கும் (Front line Workers) கரோனா தொற்று உறுதியாகியிருப்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தோம்.

குறிப்பாக முதல் 7 நாட்கள் கரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், அடுத்த 7 நாட்கள் மருத்துவமனை தனிமைப்படுத்தலிலும், அதன் பிறகு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அடுத்த 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலிலும் இருந்து பின்பு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு அதன்பிறகுதான் மீண்டும் பணிக்குத் திரும்பவேண்டும் என்பவை முழுவதுமாக பின்பற்றபடுவதில்லை.

மேலும் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே பணி செய்யவேண்டிய மருத்துவர்கள், நிர்பந்தத்தினால் அரசு வழிகாட்டுதல்களை மீறி சில சமயம் 12 மணி நேரம் பணியமர்த்தப்படுவதையும் கூறினோம்.

மருத்துவமனை என்பதே நோய்த்தொற்றின் மையப் பகுதி (Hot spot) என்பதால் தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் High Risk Zone () Moderate Risk Zone என மட்டுமே தரம்பிரிக்க வேண்டுமெனவும், அதனடிப்படையில் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரினோம்.

குறிப்பாக கோவையில் குழந்தை பெற்ற பெண்ணுக்கும் கரோனா உறுதியாகியிருப்பதைச் சுட்டிக்காட்டி கரோனா சிகிச்சையில் ஈடுபடாத, பிரசவ அறையிலிருக்கும் மருத்துவர்கள் மற்றும் இன்னபிற மருத்துவர்களுக்கும் PPE கொடுக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தோம். மேற்குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் ஆவணங்களோடு பதில் மனுவாக தாக்கல் செய்தோம்.

தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவை படித்து, வாதம் செய்ய அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவாரம் அவகாசம் கோரினார். நமது தரப்பில் ஏற்கனவே அவர்கள் தாக்கல் செய்த பதிலுரையிலுருந்தே நாங்கள் வாதம் செய்கிறோம் என முன்வைத்தோம். ஆனால் நீதிபதிகள் சத்தியநாராயனன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் வழக்கை ஒருவாரம் கழித்து பட்டியலிட உத்தரவிட்டனர்.
கரோனா ஆபத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் மருத்துவர்கள் பாதுக்காக்கப்பட வேண்டும். அதனால்தான் மருத்துவர் சைமன் இறப்பின் போது, தானாக முன்வந்து விசாரித்தது நீதிமன்றம்.
ஆனால் தற்போது அரசே கரோனாவோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளதால், நீதிமன்றம் விசாரணையில் 'அவசரம்' காட்டவில்லை போலும்.

ஆனால் முன்னணிப் பணியாளர்களின் நிலையோ ஆபத்துக் கட்டத்தில். இந்த அவல நிலைக்கு தீர்வு காண, அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்பதே தற்போதைய நிலை.

வழக்குரைஞர் சு.ஜிம்ராஜ் மில்டன்
கிளைச் செயலாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை