Wednesday 13 January 2021

முகநூல் நட்புகளுக்கு ஓர் வேண்டுகோள்!

PRPC தோழர்களுக்கு,

நமது முகநூல் தொடர்பாக!

வணக்கம்.  நமது ”மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்” சார்பாக “ *People’s Right Protection Centre, Tamil Nadu”* என்ற பெயரில் சில வருடங்களாக முகநூலில் ஒரு பக்கத்தை (Page) தொடங்கி  தொடர்ந்து பதிவிட்டுவருகிறோம். இதில் மனித உரிமை மீறல் தொடர்பான செய்திகள், நமது அமைப்பு பல்வேறு பகுதிகளில் முன்னெடுத்து வரும் மக்கள் பணிகளையும், பொதுநல வழக்கு குறித்த செய்திகளையும், பொதுவான செய்திகளையும் தொடர்ந்து பதிவிட்டுவருகிறோம்.    இதுவரை *13356* பேர் நமது பக்கத்தை பின்தொடர்பவர்களாக ( *Followers* ) இருக்கிறார்கள்.  ஒவ்வொரு மாதமும் *இரண்டு லட்சம்* , சில சமயங்களில் *நான்கு லட்சம்* பேருக்கு மேலாக நமது பதிவுகள் சென்றடைகின்றன. 

தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதால் சங்கிகள் கடுப்படைகிறார்கள். நமது பக்கத்தை முகநூல் நிர்வாகத்திற்கு அவ்வப்பொழுது  புகார் தருகிறார்கள்.   முகநூல் நிர்வாகமும் பதிவுகளின் தன்மை குறித்து எல்லாம் ஆய்வதில்லை.  நாலைந்து பேர் புகார் அளித்துவிட்டால், பதிவுகளை முடக்குவது! நமது பக்கத்தை முகநூலில் இயங்கிவரும் குழுக்களில் பகிர தடை செய்வது, நமது பக்கத்திலேயே பதிவுகள் இட சில நாட்களுக்கு தடை என விதவிதமாய் யோசித்து நம்மை முடக்க நினைக்கிறார்கள். டிசம்பரில் கூட நமது பக்கத்தை சில நாட்களுக்கு முடக்கி வைத்துவிட்டார்கள்.  சில ஏற்பாடுகளை செய்து, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் இயங்க துவங்கியிருக்கிறோம்.  

சங்கிகளின் புகார்கள் மட்டுமல்ல! முகநூல் நிர்வாகமே ஆளும் கட்சியாக இருக்க கூடிய பா.ஜனதா சார்பான நிலை எடுத்து விட்டதாக சமீபத்திய செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.  ஆகையால் நாம் முகநூலில் தொடர்ந்து இயங்கவேண்டுமென்றால், நாம் சில முன்னேற்பாடுகளை செய்யவேண்டியிருக்கிறது.   இனி நமது பக்கத்தில் மட்டும் நமது பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வருவது! நாம் அங்கம் வகிக்கும் குழுக்களில் நமது பதிவுகளை பகிர்வது இல்லை என முடிவுக்கு வருகிறோம்.  இப்படி ஒரு முடிவு எடுக்கும் பொழுது, நமது பதிவுகள் பரவலாக சென்றடையாது. ஏனென்றால், நாம் அங்கம் வகிக்கும் குழுக்களில் ஒரு குழுவில் 4000 பேரும் உண்டு. இன்னொரு குழுவில் 70000 பேர் கூட உண்டு.   குழுக்களில் நாம் பகிரும் பொழுது தான் நமது பதிவுகள் பல ஆயிரம் பேரை சென்றடையும். 

ஆகையால், முகநூலில் இயங்கி வரும் தோழர்களிடம் கோருவதெல்லாம், *நாம் போடும் பதிவுகளை தோழர்கள் தங்களது டைம்லைனில் (Share) பகிருங்கள். ஏதாவது குழுவில் இருந்தால், அந்த குழுவிலும் பகிருங்கள்.  அப்பொழுது தான் நமது கருத்துக்கள் மக்களை பரவலாக சென்றடையும்* .   

இப்படி பகிருந்தால், மீண்டும் நம் மீது புகார் தெரிவிக்கமாட்டார்களா என கேள்வி எழுந்தால், வரும். அதை நாம் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்.

வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும், கேளுங்கள். விவாதிப்போம். 

நன்றி.

தோழமையுடன்,

ஜிம்ராஜ் மில்டன்,
வழக்கறிஞர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை.

No comments:

Post a Comment