Saturday 28 May 2022

அண்ணாமலை மீது அவதூறு வழக்குப் போடு!

அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார். அதன் பிறகு மு க ஸ்டாலின் அவர்களின் உரை குறித்து பேட்டி அளித்த பா.ஜ.க தலைவர், செய்தியாளர்களை மிகவும் இழிவுபடுத்தி அவதூறாகப் பேசி உள்ளார். எனவே அண்ணாமலை மீது அவதூறு வழக்குத் தொடுக்க வேண்டும் எனச் சாடுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள்.

பாருங்கள்! பகிருங்கள்!!


நன்றி: அரண் செய்

Thursday 19 May 2022

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணை அறிக்கை ஒரு மோசடி!

தூத்துக்குடியை மாசுபடுத்தும்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய 100 நாள் போராட்டத்தில் அன்றைய எடப்பாடி அதிமுக அரசு காவல்துறையை ஏவி போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரை படுகொலை செய்தது. 

துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை அறிக்கையை தற்போது தாக்கல் செய்துள்ளது. குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டிய காவல்துறையினரை சாட்சிகளாகவும், சாட்சிகளாக இருக்க வேண்டிய பொதுமக்களை குற்றவாளிகளாகவும் சிபிஐ யின் புலனாய்வு அறிக்கை கூறுகிறது. 

இந்த அறிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாகவும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் புதிய புலனாய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு  சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு.




Tuesday 10 May 2022

ராஜபக்சே நிலைமை மோடிக்கும் வரும்!

இனவெறியைக் கையில் எடுத்துக் கொண்டு இலங்கையை சின்னாபின்னமாக்கிய ராஜபக்சேவுக்கு நேர்ந்த கதிதான், மதவெறியைக் கையிலெடுத்துக் கொண்டு இந்தியாவை சின்னாபின்னமாக்கி வரும் மோடிக்கும் நேரும்! 

இது ஆரூடம் அல்ல. மோடியின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எடை போட்டு ஆதாரத்தோடு அலசுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்! 

நன்றி: அறக்கலகம்

Sunday 8 May 2022

ஆதீன சர்ச்சை: பழைய மரபு என்றால் தமிழிசை மேலாடை அணிய முடியுமா?

தருமபுர ஆதீனத்தின் பட்டனப் பிரவேசம் குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பார்ப்பன ஆர்எஸ்எஸ் சங் பரிவாரக் கும்பல் இந்தப் பிரச்சினையை ஊதிப் பெருக்கி வருகிறது.

பல்லக்கில் சுமப்பதே சட்டப்படி குற்றம்; விளாசுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். அறக்கலகம் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டி. பாருங்கள்! பகிருங்கள்!



Friday 6 May 2022

தருமபுர ஆதீனம்! இறைவனுக்குச் சமமானவரா?

தர்மபுர ஆதீனம் இறைவனுக்குச் சமமானவரா?

கடவுளைச் சுமக்கும் பல்லக்கில், மடாதிபதியை சுமக்க வேண்டுமா?

ஆன்மீகத்தில் மதவெறியைக் கலந்து தமிழகத்தின் பொது அமைதியை சீர்குலைக்க முயலும் மன்னார்குடி ஜீயரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

பட்டனப் பிரவேசத்தை தடை செய்த தமிழக அரசை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்   மனதாரப் பாராட்டுகிறது!

தமிழக அரசின் செயல் சரியான சமத்துவ இறைப்பணி என்று போற்றுகிறது!

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)

128, கோகுலம் இல்லம், அரசமரத் தெரு திருவண்ணாமலை மாவட்டம்

90474 00485.

+++++++++++++++++

பத்திரிக்கை செய்தி

நாள் : 06.05.2022

தர்மபுர ஆதீனம் இறைவனுக்குச் சமமானவரா?

கடவுளைச் சுமக்கும் பல்லக்கில், மடாதிபதியை சுமக்க வேண்டுமா?

ஆன்மீகத்தில் மதவெறியைக் கலந்து தமிழகத்தின் பொது அமைதியை சீர்குலைக்க முயலும் மன்னார்குடி ஜீயரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

பட்டனப் பிரவேசத்தை தடை செய்த தமிழக அரசை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்   மனதாரப் பாராட்டுகிறது!

தமிழக அரசின் செயல் சரியான சமத்துவ இறைப்பணி என்று போற்றுகிறது!

----------

குன்றக்குடி ஆதீனம் முதல் தமிழகத்தின் அனைத்து ஆதீனங்களும், காலத்துக்கும்,கடவுளுக்கும் ஒவ்வாதது என்று கைவிட்ட , பட்டனப் பிரவேசம் என்ற மனிதனை, மனிதன் தூக்கும் பல்லக்கு மரபை மீண்டும் கையிலெடுத்து தமிழகத்தின் சமத்துவ மரபுக்கு எதிராக நிற்கிறார் தருமபுரி ஆதீனம்.சைவம், தமிழ் என்று பேசும் தர்மபுர ஆதீனம் சிதம்பரம் நடராசர் கோயிலில்  கடந்த 13 ஆண்டுகளாக  நடந்துவரும், தமிழில் தேவாரம், திருவாசகம் பாடும் போராட்டத்தை ஒரு நாளும்  ஆதரிவிக்கவில்லை.

தேவாரம், திருவாசகம், தமிழுக்காகப் பேசவில்லை என்பது மட்டுமல்ல, குமூடிமலை சிவனடியார் ஆறுமுகசாமியை , சிதம்பரம் தீட்சிதப் பார்ப்பனர்கள் தாக்கிபோதும் மவுனம் காத்தவர்தான் தருமபுரி ஆதீனம். ஆதீனத்திற்கு கட்டுபட்ட வைத்தீசுவரன் கோயில் உட்பட எந்தக் கோயிலிலும் தமிழில் குடமுழக்கு செய்ததில்லை. சமஸ்கிருதத்தையே ஆதரித்து, பயன்படுத்தி வருகிறார். 

தமிழகத்தில் உள்ள சைவ வேளாளர் உள்ளிட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டி, தொடர்ந்து 50 ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட மக்கள் போராட்டத்தை இவர் கண்டுகொண்டதில்லை. தமிழ் மக்களின் பணத்தில் வாழும் தருமபுரி ஆதீனம்,தமிழக மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் கே.என்.இரவியை மடத்துக்கு அழைத்து விழா நடத்துகிறார். தொடர்ந்து ஆளுநருக்கு பாதுகாப்பில்லை என பிரச்சாரம் செய்யப்படுகிறது.மதுரை ஆதீனம் ஆளுங்கட்சியினருக்கு எதிராக பா ஜ க ஆதரவு இராம ரவி வர்ம குமார், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பேசுகிறார்.

தொடர்ந்து மன்னார்குடி ஜீயரான செண்டலங்கார ஜீயர், "பல்லக்குத் தூக்குவதைத் தடுத்தால் தமிழ்நாட்டு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாட்டில் நடமாட முடியாது" என மிரட்டுகிறார். ஆதீனங்கள் - பா ஜ க - ஆளுநர் ஆதரவு - திராவிட இயக்க எதிர்ப்பு  ஆன்மீகத்தில் மதவெறி அரசியலைக் கலப்பதாகும். தமிழகத்தின் பொது அமைதியை சீர்குலைக்க முயலும் 

மன்னார்குடி ஜீயரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

ஆளுநர் மீதான மக்களின் எதிர்ப்பை திசைதிருப்பும் விதமாகவே பா ஜ க தலைவர் அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும் , பட்டனப் பிரவேச பிரச்சனையை வைத்து தமிழக அரசிற்கு எதிராகப் பேசுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசு, சைவத்திற்கு எதிரானது போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்க ஆதீனமும் - பா ஜ க-வும் இணைந்து  முயற்சிக்கிறார்கள்.உண்மையில் ஆன்மீகத்தில் சமத்துவத்தை உருவாக்கி, ஆன்மீகத்தை காத்தது திராவிட அரசு.

கோயிலில் அனைத்து சாதி தமிழர்களை அழைத்துச் சென்றது முதல் கருவறையில் பூஜை செய்ய வைத்தது வரையிலான வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியது திராவிட இயக்கம்தானே தவிர எந்த மடாதிபதியும் அல்ல. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட  சைவர்கள், இந்துக்களின் வழிபாட்டு, பூசை உரிமைகளுக்கு  தருமபுரி ஆதீனம் என்றாவது பேசியுள்ளாரா? 206 அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் ஆகமம், வேதம், தேவாரம், திருவாசகம் , மந்திரங்கள் கற்று, தீட்சை வாங்கி, சான்றிதழும் பெற்று 2007 முதல் 2021 -ல் தி.மு.க ஆட்சி வரும்வரை 15 வருடங்கள் சாதியால் பணி மறுக்கப்பட்டு தெருவில் நின்றோமே, அப்போதெல்லாம் தர்மபுர ஆதீனம் எங்கே சென்றார்? லிங்காயத் என்ற வீர சைவ மதத்தை உருவாக்கிய கர்நாடகாவின் மாபெரும் ஆன்மீக புரட்சியாளர் பசவண்ணா அவர்களே பல்லக்கில் மனிதனை, மனிதன் சுமப்பதை எதிர்த்துள்ளார். 

பசவண்ணா, குன்றக்குடி ஆதின கர்த்தரை விட தர்மபுர ஆதீனம் பெரியவரா? 

தமிழுக்கும், சைவத்துக்கும் அவர் ஆற்றிய தொண்டு என்ன?

பட்டனப் பிரவேசத் தடை என்பது, ஆன்மீக நடவடிக்கை அல்ல.அரசியல் சட்ட நடவடிக்கை. இறைவன் விரும்பும், மனித நேய , சமத்துவ நடவடிக்கை. அரசியல் சட்டப்படி, தனிமனிதனின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டிய அரசியல் சட்டக் கடமை தமிழக அரசுக்கு உண்டு. தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், மனிதக் கழிவை மனிதனே அகற்றல்,கை ரிக்‌ஷா ஒழித்தல் போன்ற அரசியல் சட்ட விரோத நடவடிக்கை போன்றதே மனிதனை, மனிதன் சுமக்கும் பல்லக்கு தூக்கும் நிகழ்வு.எனவே பட்டனப் பிரவேசத் தடை சரியான நடவடிக்கையே.கடந்த 2010-ஆம் ஆண்டில் சிறீரங்கம் அரங்கநாதன் கோயிலில் பிரம்மரதம் என்ற பல்லக்கு நிகழ்வை கோயிலின் இணை ஆணையர் திரு.ஜெயராமன் அவர்கள் தடைசெய்தது, சரியான நடவடிக்கை என வேத வியாச லட்சுமி நரசிம்ம பட்டர் வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டியது தமிழக அரசின் அரசியல் சட்டக் கடமை. எனவே , முற்றும் துறந்தவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தர்மபுர ஆதீனம் அவர்கள், பட்டனப் பிரவேசம் என்ற அதிகாரத்துவ நடவடிக்கையை, மனித நேயமற்ற, கண்ணியக் குறைவான, அரசியல் சட்ட விரோத செயலை உடனே கைவிட வேண்டும் என்றும், ஆன்மீகத்தில் பார்ப்பனீய அரசியலைக் கலந்து, அமைதிப் பூங்காவான தமிழகத்தை சிதைக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம்.

இறைவன் விரும்பியபடி சமத்துவ ஆன்மீகத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் தமிழக முதல்வர் அய்யா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்  என்றும் துணை நிற்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

வா.ரங்கநாதன், தலைவர், 

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

தொடர்பு எண்: 9047400485

ஆர்எஸ்எஸ் பிடியில் ஆதீனம்! பெரும் கலவரத்திற்குத் திட்டம்!

தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் தடை செய்யப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்களுடன் ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் அவர்கள் நடத்திய நேர்காணல்.

பாருங்கள்! பகிருங்கள்!