Tuesday 28 April 2020

திருவண்ணாமலையில் பழங்குடியினருக்கு கரோனா நிவாரண உதவி

கரோனா ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை வட்டம், அய்யம்பாளையம் புதூர் கிராமத்தில் 170 குடுகுடுப்பைச் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து உணவுக்குக்கூட வழியில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் உயிர் காக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் நேரில் சென்று உதவி செய்யக்கோரி இரண்டு நாள்களுக்கு முன்பாக கோரிக்கை வைத்திருந்தோம்.

20-04-2020 பகல் 12 மணியளவில் அந்த நிராதரவற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சமூக அக்கறை கொண்டவர்களிடம் தொடர்பு கொண்டு நாம் நன்கொடை பெற்று 15 மூட்டை அரிசி, 2 மூட்டை சர்க்கரை, டீ தூள், எண்ணெய், பிஸ்கட் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை  நேரில் வழங்கினோம். மேலும் அவர்களைப் போலவே தொழில் இல்லாமல் வாடும் சிலரை அடையாளம் கண்டறிந்து உதவி செய்தோம்.

*****
26.04.2020


கரோனா நிவாரண உதவி! 

பள்ளிகொண்டாபட்டுக் கிராமத்தில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத 30  குடும்பங்களுக்கு  அரிசி, பருப்பு, எண்ணெய், வெங்காயம், புளிமஞ்சள்தூள், மிளகாய்த் தூள், கேரட், பிஸ்கட்  ஆகிய பொருட்கள் 26.04.2020 அன்று மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.   























என்றும் மக்கள் சேவையில்,

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருவண்ணாமலை மாவட்டக் கிளை.

தொடர்புக்கு
9443724403,

9842321773