Showing posts with label Modi. Show all posts
Showing posts with label Modi. Show all posts

Friday, 11 August 2023

ஆடையில்லாமல் பெண்களை இழுத்துச் சென்றது நியாயமா? ஸ்மிருதி ராணியே பதில் சொல்!

பாஜக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டும் ஸ்மிருதி இராணியே,  மணிப்பூரில் பெண்கள் ஆடையில்லாமல் இழுத்துச் செல்லப்பட்டதற்கு பதில் என்ன?? பாஜககாரர்கள் தேச பக்தர்கள் அல்ல, தேசத் துரோகிகள்!!! 

அம்பலப்படுத்துகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள். பகிருங்கள். 

வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன்  ஒருங்கிணைப்பாளர் - PRPC TN

நன்றி: ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌arakalagamtv 



Sunday, 26 March 2023

சனாதனத்திற்கு எதிராக மதுரையில் கருத்தரங்கம்!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளையின் சார்பில் 25.03.2023 அன்று மதுரையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

சனாதனம்-அனைத்து சாதியினர் அர்ச்சகர் உரிமை மறுப்பு-ஸ்டெர்லைட் அநீதி என்ற கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தின் மூன்று கோணங்களை விளக்கித் தலைவர்கள் உரையாற்றினர். 

கார்ப்பரேட் அதானி - காவி ஆர் எஸ் எஸ்-ஐ காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், அதன் பிறகு நடைபெற்று வரும் பின் விளைவுகளைப் பார்க்கும் போது, நீதித்துறையில் நிலவும் காவி மயத்தையும் எதிர்க்காமல் இனி அரசியல் இல்லை என்பது தெளிவாக்கப்பட்டது. 

பேச்சாளர்கள்-பங்கேற்பாளர்கள், நிகழ்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்த மதுரை கிளைச் செயலர் லயனல் அந்தோணிராஜ் தோழருக்கும், தலைவர் பேராசிரியர் சீனிவாசன் மற்றும் செயற்குழுவிற்கும் நன்றி!

வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர் 
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்







தோழர் சீனிவாசன்

தோழர் இராமசாமி

தோழர் வாஞ்சிநாதன்

தோழர் மருதையன்

தோழர் லயனல் அந்தோனிராஜ்









Tuesday, 28 June 2022

தீஸ்தா செதல்வாத் கைது! சட்டத்தின் ஆட்சி மீதான பாசிசக் காவி புல்டோசர் தாக்குதல்!

2002 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் மிகப் பெரிய கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களைப் படுகொலை செய்தது ஆர்எஸ்எஸ்-பாஜக உள்ளிட்ட சங் பரிவாரக் கும்பல்.  

இந்தப் படுகொலைக்கு எதிராக நாடெங்கிலும் பரவலாகக் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்ட அதேவேளையில், பிரபல சமூக செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான தீஸ்தா செதல்வாத், மோடி உள்ளிட்ட குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி  நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். மோடி உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை என உச்ச நீதிமன்றம் நியமித்த ‘சிறப்பு விசாரணைக் குழு' அளித்த அறிக்கைக்கு எதிராக மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடிய போது, வழக்கைத் தள்ளுபடி செய்கிறது உச்ச நீதிமன்றம்.

வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள், தீஸ்தா செதல்வாத் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இந்த வழக்குக்கு ஆதரவாகச் செயல்படும் முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் மீது, இந்த வழக்கில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி, போலியானத் தகவல்களை அளித்து, ஒரு சிலருக்கு மரண தண்டனை பெறும் நோக்கத்தோடு தவறான சாட்சியங்களைக் கொடுத்து, ஏமாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டதாக பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வழக்கு தொடுத்துள்ளது குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு.

மதவாத, அரசு பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக, நீதி கேட்டுப் போராடும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைப் போராளிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணி. எத்துணை கொடூரங்கள் நடந்தாலும் அதற்கு எதிராக யாரும் நீதி கேட்டு நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என்கிறது மோடி அரசு. இது போன்ற வழக்குகளால் மனித உரிமைப் போராளிகளை நசுக்குவதன் மூலம் மதவாத மற்றும் அரசு பயங்கரவாத கும்பல்கள் அப்பாவி மக்களை சித்திரவதைக்குள்ளாக்கவும் படுகொலை செய்யவும் வழிவகை செய்கிறது.

தீஸ்தா செதல்வாத்

உத்திர பிரதேசத்தில் சங்பரிவாரக் கும்பலுக்கு எதிராகப் போராடியவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்ததும், தீஸ்தா சேதல்வாத் கைதும் வேறு வேறு அல்ல. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அறிவித்துள்ளபடி, வருணாசிரம இந்து சாம்ராஜ்யத்திற்கான வாகனம் வேகமெடுத்து முன் செல்கிறது. இதைத் தடுக்க முனைவோர் அகற்றப்படுகிறார்கள்; இனியும் அகற்றப்படுவார்கள். தீஸ்தா சேதல்வாத்தின் கைது இதைத்தான் உணர்த்துகிறது. 

குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக நீதி கேட்டது குற்றமா? சட்டத்தை நம்பி, நீதிமன்றங்களை  நாடினால் நீதிக்காகப் போராடுவோரை உச்சநீதிமன்றமே சிறைக்கு அனுப்பத் துணை நிற்கிறது. இது என்ன நாடா அல்லது காடா? முசோலினி, ஹிட்லர் ககாலத்திலகூட நடக்காத அநீதிகள் இந்தியாவில் அரங்கேறுகின்றன. 

சமூக செயல்பாட்டாளர்களும், மனித உரிமைப் போராளிகளும், வழக்குரைஞர்களும் முடக்கப்பட்டு விட்டால் வஞ்சிக்கப்படும் மக்களுக்கு நாதி ஏது? 

தீஸ்தா செதல்வாத் கைது மற்றும்  ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோருக்கு எதிரான வழக்கை முறியடிக்கக் குரல் கொடுப்போம்!

படர்ந்து வரும் பார்ப்பன பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்!

சமூக செயல்பாட்டாளர்களையும், மனித உரிமைப் போராளிகளையும், வழக்கறிஞர்களையும் பாதுகாக்க அணியமாவோம்!

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர் 
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு

நாள்: 28.06.2022
மதுரை

Tuesday, 20 July 2021

நாட்டு மக்களை வேவு பார்க்கும் தேசத் துரோகிகள்!

பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், மந்திரிகள் உள்ளிட்ட எண்ணற்ற இந்தியர்களை, இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் மென்பொருளைக் கொண்டு மோடி-அமித்ஷா கும்பல் தலைமையிலான ஒன்றிய அரசு வேவு பார்ப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது.

நாட்டு மக்களை வேவு பார்க்கும் மோடியும் அமித்ஷாவும் சைபர் பயங்கரவாதிகள், தேசத்துரோகிகள், ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய அளவுக்கு குற்றமிழைத்தவர்கள். சாடுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள். பாருங்கள்! பகிருங்கள்!

நன்றி: Arakalagam tv

Tuesday, 27 April 2021

குவியும் பிணங்கள்! கதறும் மக்கள்! மோடியின் கையாலாகாத்தனம்!

கரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை இந்தியாவையே உலுக்கி வருகிறது. நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், வரும் நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவும் சூழலில், நோய்த் தொற்றுக்கு ஆளானோர் சுவாசிக்க பிராணவாயுகூட இல்லாமல் வட இந்தியாவில் பிணங்கள் குவிகின்றன. இராமனுக்குக் கோவில் கட்டினால் போதாது; கொத்துக் கொத்தாய் மடியும் மக்களைக் காக்க குறைந்தபட்ச மருத்துவ வசதியைக்கூட செய்யத்தவறிய கையாலாகாத மோடியின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிடுகிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் ‌‌‌‌‌அவர்கள்


நன்றி: கருஞ்சட்டைப் படை

.

Saturday, 6 March 2021

விவசாயிகள் போராட்டம்! 100 - வது நாள்: திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

திருச்சி

அன்பார்ந்த வழக்கறிஞர்களே, பொதுமக்களே,

மக்களின் உணவு உண்ணும் உரிமைக்காக டில்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கு மேலாக பன்னாட்டு நிறுவனங்களின் கைக் கூலி மோடி - பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அப்போராட்டத்தை ஆதரித்துக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 06.03.2021-ம் தேதி சனிக்கிழமையன்று காலை 10:30 மணியளவில் திருச்சி நீதிமன்ற வாயில் முன்பு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ப.முருகானந்தம் தலைமையில் நடந்தது. வழக்கறிஞர்கள் போஜக்குமார், ஆதிநாராயணமூர்த்தி, தாஜுதீன், சங்கர், கென்னடி, பானுமதி, பர்சானா, யாசர், சாருவாகன், ராமச்சந்திரன், கலைச்செல்வி, அரிச்சந்திரன், ஜாகீர், கிளர்ச்சியாளன், பிரசாத், சாகுல், ஆனந்தநாராயணன், ஜீவா, வினோத் மற்றும் தோழர்கள் செந்தில், சபி, கார்த்திக் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கார்பரேட் கைக் கூலி மோடி - பா.ஜ.க-வினரையும் ஜால்ரா போடும் எடப்பாடியையும் விரட்டியடிக்க வேண்டுமென்று முழக்கமிட்டனர்.




தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருச்சி 

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் தொடர் போராட்டம் 100-ம் நாளை எட்டி உள்ள நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 06.03.2021 அன்று முன்னெடுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடும் பொருட்டு திருச்சி நீதிமன்றத்தில் 05.03.2021 அன்று பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.



தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருச்சி 

Tuesday, 19 May 2020

கரு.நாகராஜன் ஜோதிமணியை மிரட்டுகிறார்!

18.05.2020 அன்று நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களை இழிவு படுத்திப் பேசிய பாரதிய ஜனதாக் கட்சியின் கரு.நாகராஜன் என்கிற நபருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனக் குரல்கள் எழுகின்றன.

கரு.நாகராஜன் போன்ற பாரதிய ஜனதாக் கட்சியினரின் இத்தகைய திமிர்த்தனமான பேச்சுக்கான அடிப்படை குறித்தும், பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-சின் சித்தாந்தம் குறித்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் உரை. கேளுங்கள்! பகிருங்கள்! பரப்புங்கள்!

நன்றி: அறக்கலகம் டிவி ARAKALAGAM TV

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தொடர்புடைய பதிவுகள்

விஜய்சேதுபதி மீது பாயும் சங்கிகளுக்குச் சவுக்கடி.
டாஸ்மாக் : கரோனாவின் கொலைக்கூடம்!