Tuesday 18 August 2020

ஸ்டெர்லைட் தீர்ப்பைக் கொண்டாடும் தமிழகம்!

தூத்துக்குடி மக்களை அச்சுறுத்தி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து வழங்கிய தீர்ப்பைத் தமிழகமே கொண்டாடுகிறது.

கொண்டாட்டத்தில் நாமும் பங்கேற்போம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தூத்துக்குடியிலிருந்து....

தீர்ப்பை வரவேற்கிறோம். 

தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை பிரித்து அகற்ற வேண்டும்! 

                                                               ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தூத்துக்குடி மக்கள் வரவேற்கிறோம். இதற்காக உழைத்த அனைத்து பொது மக்களுக்கும், கட்சிகளுக்கும்,  அமைப்புகளுக்கும்,  இயக்கங்களுக்கும் தூத்துக்குடி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசு இந்த தீர்ப்பினை பயன்படுத்தி தூத்துக்குடி மக்களின் கீழ்க்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

1.ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி  சிப்காட் வளாகத்தில் இருந்து பிரித்து அகற்ற வேண்டும்.

                                                                   2.ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களை துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

                                                                         3.பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.

4.மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்யக்கூடாது.

5.உயிர் தியாகம் செய்த 15 தியாகிகளுக்கு தூத்துக்குடி மையப்பகுதியில் நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும். 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு,

தூத்துக்குடி

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

வழக்குரைஞர் அரிராகவன் பேட்டி.....


மதுரையிலிருந்து....

வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அறிக்கை.

இன்றையத் தீர்ப்பு வரை அனைத்து நிலைகளிலும் எங்களுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி!

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போரில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு மடத்தூரில் உருவாகியது முதல்...

தொடர் போராட்டங்கள், கூட்டங்கள், ஊர்வலம், பொதுக்கூட்டம், மே 22 மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை, மறு பிரேதப் பரிசோதனை வழக்கு, சட்ட உதவி வழக்கு, தலைமறைவு வாழ்க்கை, சென்னை ஏர்போர்ட்டில் கைது, பாளையங்கோட்டை சிறை, வீடு, அலுவலகம் ரெய்டு,  273 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றியது, தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம், 100-க்கும் மேலான வழக்குகளை உடைத்தது, பசுமைத் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம், இன்றுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் நுழைய நீடிக்கும் தடை, இன்றையத் தீர்ப்பு என அனைத்து நிலைகளிலும் எங்களுடன் பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!

- வாஞ்சிநாதன்,

வழக்கறிஞர்,

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,

தமிழ்நாடு.


சென்னையில்.....

ஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி!

சென்னை உயர் நீதிமன்ற வாயிலில் வழக்குரைஞர்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். 

வழக்குரைஞர் ஜிம்ராஜ் மில்டன் பேட்டி.....


தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை மற்றும் தூத்துக்குடி

தொடர்புடைய பதிவுகள்:

தீர்ப்புக்குப் பிறகும் பிஜேபி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு!

No comments:

Post a Comment