Saturday 1 August 2020

குற்றவியல் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக வழக்குரைஞர்கள் போராட்டம்!

குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் Dr.Ranbir Singh தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்றை  அமைத்துள்ளது. 

பொது மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில்  இந்திய தண்டனைச் சட்டம், இந்தியச் சான்றுச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.

தற்போதுள்ள சட்டப்படி குற்றம் சுமத்தப்பட்டவர் போலீசாரிடம் கொடுக்கும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது. ஆனால் இத்தகைய வாக்குமூலங்கள் இனி செல்லும் என சட்ட திருத்தம் மேற்கொள்ளவிருக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான சட்டதிருத்தமாகும். இது போலீசாரையே நீதிபதிகள் ஆக்குவதற்கு ஒப்பானது. கட்டற்ற அதிகாரத்தை போலீசாருக்கு வழங்குவதன் மூலம் நாடே சாத்தான்குளமாக மாறும் அபாயம் உள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளிதான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்குதான் உணடு. இதுதான் தற்போதைய சட்ட நடைமுறை. ஆனால் இனி குற்றம் சுமத்தப்பட்டவர்தான் தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என்கிற வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளவிருக்கிறார்கள். 

மிக முக்கியச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு அதன் பிறகு முடிவு செய்ய வேண்டும். கரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ள தற்போதைய சூழலில் அது சாத்தியம் இல்லை என்பதனால் சட்ட திருத்தம் மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழுவை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்று தமிழக-புதுச்சேரி வழக்குரைஞர்கள் கோருகின்றனர்.  

பல்வேறு அரசுத்துறைகள் இயங்கும் பொழுது நீதிமன்றங்களை மட்டும் பூட்டி வைத்திருப்பது வழக்குரைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்ற அதே நேரத்தில் பொதுமக்களுக்கான சட்ட நிவாரணங்களும் மறுக்கப்படுவதாக வழக்குரைஞர்கள் குற்றம் சுமத்துகின்றனர். 
 
சட்டத்திருத்தம் மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழுவை  உடனடியாக கலைக்க வேண்டும்,  நீதிமன்றங்களை உடனடியாகத் திறக்க வேண்டும்  என்கிற இரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 31.07.2020 அன்று தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர் அதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பு. 

1. திருவண்ணாமலை


2. பென்னாகரம், தருமபுரி மாவட்டம்

3. தஞ்சாவூர்


4. மேட்டுப்பாளையம்

5. கோயம்புத்தூர்
6. தேனி

7. நாகர்கோவில்

8. சிவகங்கை



9.நீலகிரி

10. இராமநாதபுரம்


11. கும்பகோணம்

12. அவிநாசி

13. குழித்துறை

14. உடுமலைப்பேட்டை

15. கோபிசெட்டிபாளையம்

16. காங்கேயம்

17.திருநெல்வேலி


18.காட்பாடி



19.வேலூர்


20.மதுரை

21.திண்டிவனம்


தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், நாகர்கோவில்

No comments:

Post a Comment