Tuesday 18 August 2020

பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாகக் களமிறங்கிய வழக்குரைஞர்கள்!

உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்குரைஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர் பிரசாந்த் பூஷன் அவர்களை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் குற்றவாளி என 14.08.2020 அன்று அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்த வழக்கின் தண்டனை தொடர்பான விவாதம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றால் நாடே தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆலைகளும், நிறுவனங்களும் மெல்ல மெல்ல பழைய நிலைக்குத் திரும்ப முயலும் இன்றைய சூழலில்தான் மேற்கண்டத் தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். 

காஷ்மீருக்கான 370 நீக்கம் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுது பிரசாந்த் பூஷன் மீதானா வழக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா?

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஒருவரின் ஹார்டி டேவிட்சன் என்கிற விலை உயர்ந்த மோட்டர் சைக்கிளில் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அவர்கள் அமர்ந்திருப்பது குறித்து ஜூன் மாதத்தில் ஒரு ட்வீட் செய்தியையும், ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கில் கொண்டு, கடந்த நான்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் காலம் ஜனநாயகத்தை அழிப்பதற்கான காலம் என்று ஜூலை மாதத்தில் ஒரு டுவீட் செய்தியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷன் அவர்கள் வெளியிட்டிருந்தார். 

இந்த இரண்டு ட்வீட் செய்திகளும் நீதித்துறையின் மாண்பையும் அதிகாரத்தையும் களங்கப்படுத்தி விட்டதாக பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டு குற்றவாளி என அறிவித்துள்ளது என்பது கருத்துச் சுதந்திரத்தின் மீது விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகும்.

பொது நலன் சார்ந்து இந்த அவமதிப்பு வழக்கை அவர்கள் எடுக்கவில்லை. மாறாக  தங்களை எப்படிக் கேள்வி கேட்கலாம் என்கிற மன்னராட்சி காலத்து மனநிலையிலேயே இந்த வழக்கை உச்சநீதிமன்றம் கையாண்டியிருக்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் காலாவதியாகிப்போன நீதிமன்ற அவமதிப்பு என்கிற துருப்பிடித்த தடியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது உச்சநீதிமன்றம். 

அணை கட்டுவதற்கான தடையை நீக்கியதற்காக அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.பி.பரூச்சா அவர்களை விமர்சித்ததற்காக பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்கள் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி ஒருநாள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டின் சட்ட ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குச் சட்டத்தையே ஒழிக்க வேண்டுமென்று பரிந்துரை செய்துள்ள சூழலில் இந்தியாவில் மட்டும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி ஜனநாயகவாதிகள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்களின் குரல் வளையை நெரித்து அவர்களை மௌனிக்கத் சொல்கிறது நீதிமன்றம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் உச்ச நீதிமன்றமே அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை பறிக்கும் காலனாக இருப்பது மிகவும் ஆபத்தானது.

பிரசாந்த் பூஷன் அவர்கள் குற்றவாளி என அறிவித்துள்ளதை திரும்பப் பெறக் கோரியும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குச் சட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கக் கோரியும் தமிழக வழக்குரைஞர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 18.08.2020 அன்று சென்னையிலும் மதுரையிலும் வழக்குரைஞர்கள் ஒன்றுகூடி உச்சநீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

சென்னையில் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள்:

மதுரையில் வழக்குரைஞர்கள்:

19.08.2020 அன்று திருவண்ணாமலையில்.....

நாகர்கோவில்

திருச்சி

வழக்குரைஞர் பிரசாந்த் பூசன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் திரும்ப பெற வலியுறுத்தியும், கருத்துரிமையைக் காக்கும் கடமையிலும் பொறுப்பிலும் இருக்கின்ற உச்ச நீதிமன்றமே கருத்துரிமையைப் பறிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது என்றும், அரசியலமைப்பு வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் செயலை ஒருபோதும் வழக்குரைஞர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும்..அதனைக் காக்க மக்களை அணிதிரட்டி கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை முறியடிப்போம் என முழங்கி திருச்சி வழக்குரைஞர்கள் இன்று நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோயம்புத்தூர்


திருநெல்வேலி

விழுப்புரம்

விழப்புரம் நீதிமன்றம் முன்பு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிசாந்த் பூஷன் மீது போடப்பட்ட  வழக்கை கைவிடக்கோரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு  தெரிவிக்கப்பட்டது மாநில துணைத்தலைவர்கள் ராமமூர்த்தி சங்கரன் மற்றும் மாவட்ட துனைத்தலைவர் கண்ணப்பன் பிரகாஷ் சம்சுதீன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்தார்கள்.

பிற மாநிலங்களில்

பஞ்சாப்

ஒடிசா

கர்நாடகா 

பெங்களூரு

தெலங்கானா

ஹைதராபாத்


தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை, மதுரை மற்றும் திருவண்ணாமலை

&

முகநூல் பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள்:

https://www.barandbench.com/news/navroz-seervai-statement-on-supreme-court-judgment-prashant-bhushan-contempt

https://m.thewire.in/article/law/watch-karan-thapar-interview-dushyant-dave-prashant-bhushan-contempt-arun-mishra

https://scroll.in/latest/970379/dark-day-for-indian-democracy-pucl-lawyers-politicians-slam-sc-ruling-against-prashant-bhushan

1 comment:

  1. Bar is Bar Mr.Bushan is Bar no bar freedomof expression

    ReplyDelete