Sunday 17 May 2020

சென்னை உயர் நீதிமன்ற வளாகம் அருகில் கரோனா நிவாரண உதவிகள்!


நண்பர்களே,

வடசென்னை மக்கள் உதவிக்குழு சார்பாக சிரமப்படும் குடும்பங்களை கண்டறிந்து ஊரடங்கு அறிவித்த மறுவாரத்திலிருந்து தொடர்ச்சியாக நிவாரண உதவிகளை செய்துவருகிறோம்.  இதுவரை துப்புரவுத் தொழிலாளர்கள், அன்றாட கூலிகள், வீட்டு வேலை செய்பவர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் என 500 பேருக்கு உதவிகள் செய்துள்ளோம்.




கடந்த ஞாயிறன்று (17.05.20) சென்னை  உயர்நீதிமன்றம்  அமைந்திருக்கும் தம்பு தெரு , லிங்கி தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் சுத்தம் செய்கிற வேலைகளை செய்கிற பெண்களும், லோடு மேன் வேலை செய்யக்கூடியவர்களும், தினசரி கூலிகள் என தகர சீட்டுகளை கொண்ட வீடுகளிலும், குடிசை வீடுகளிலும், சாலையோரங்களிலும் வாழ்ந்துவருகிறார்கள்.


அவர்களில் மிகவும் சிரமப்படுகிறவர்களை கண்டறிந்து  50 டோக்கன்கள் வழங்கப்பட்டன. அவர்களை நேர இடைவெளி விட்டு, நமது சட்ட அலுவலகத்திற்கு வரவழைத்து,  உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்  கீதா,  ஜிம்ராஜ் மில்ட்டன், பார்த்தசாரதி மற்றும்  நண்பர்களின் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, சேமியா  உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கொண்ட தொகுப்புகள்  வழங்கப்பட்டது


நாம் தொடர்ந்து செய்யும் நிவாரண உதவிகள் அறிந்து நமக்கு பல நண்பர்களும், மக்களும் தொடர்ந்து நன்கொடை கொடுத்து வருகிறார்கள்.  இந்த முறை ஊரடங்கால் அவதிப்படும் தொழிலாளர்களின் நிலை உணர்ந்து, தாய்லாந்து நாட்டில் ரயாங் பகுதியைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் திரு கார்த்திக்,  திரு. பாலசுப்பிரமணியன், திரு. யுவராஜ், திரு. சங்கர், திரு. அரவிந்தன், திரு. ரமேஷ் பரதன், திரு. மாணிக்கவேல், திரு. சரவணன் பாண்டி, திரு. விக்டர், திரு. மல்லிகார்ஜூனன், திரு. கணபதி. ஆகியோர்  நன்கொடையாக ரூ.50,100 நன்கொடையாக வழங்கினர். அவர்களிடமிருந்து நன்கொடை பெற்றுத் தந்தவர் தன்னுடைய பெயரை வெளியிடவேண்டாம் என தெரிவித்துக்கொண்டார். 


அனைவருக்கும் மக்கள் உதவிக்குழு சார்பாக நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவோம். கொரானாவிலிருந்து நம் மக்களை காப்போம்

நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லல்பட்டு வருகிறார்கள். சென்னையில் அவர்கள் எங்கெங்கு வசிக்கிறார்கள் என்ற தகவல்களை சேகரித்துவருகிறோம். அவர்களுக்கும் உதவி செய்வதற்கான ஏற்பாடுகளை இப்பொழுது செய்துவருகிறோம்.

மக்கள் பணியில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.  உதவி தேவைப்படுபவர்களும் அழையுங்கள்.

#தொலைபேசி_எண்கள்:

9941314359
8825643335
7397468117

#நன்கொடை_அளிக்க:

C. Noordeen,
Canara bank,
Thambuchetty street branch.
S.B. AC No. 0913101289441.
IFSC CNRB0000913.
Gpay No. 9884189570

இப்படிக்கு,
#வடசென்னை மக்கள் உதவிக்குழு,
சென்னை.

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னை

தொடர்புடைய பதிவுகள்

மதுரையில் கரோனா நிவாரண உதவிகள்!

சென்னையில் கரோனா நிவாரண உதவிகள்!

பழங்குடியினருக்கு கரோனா நிவாரண உதவி

No comments:

Post a Comment