Friday 8 May 2020

ஆனந்த் தெல்தும்டெ உள்ளிட்ட சமூகச் செயல்பாட்டாளர்களை உடனே விடுதலை செய்! PUDR அறிக்கை!


கரோனாவால் உலகமே முடங்கிப் போனது. மருத்துவம் உள்ளிட்ட சில அவசியமானப் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. நோய்த் தொற்று அபாயம் காரணமாக சிறைவாசிகளை பல்வேறு உலக நாடுகள் விடுதலை செய்கின்றன. ஆனால் கரோனா காலத்திலும் ஈவிரக்கமின்றி 2018 பீமா கோரேகான் வழக்கைக் காரணம் காட்டி, ஆனந்த் தெல்தும்டெ மற்றும் கௌதம் நவ்லகா இருவரையும் ஏப்ரல் 14 அன்று சிறையிலடைத்தது மோடி அரசு. மோடியின் பாசிசப் போக்கிற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

ஆனந்த் தெல்தும்டெ மற்றும் கௌதம் நவ்லகா உள்ளிட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி ஜனநாயக உரிமைக்கான மக்கள் ஒன்றியம் (PUDR) சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மோடியின் காதுகளுக்கு எட்டட்டும்!






உரக்கச் சொல்லுவோம்!

மோடி அரசே!

ஆனந்த் தெல்தும்டெ மற்றும் கௌதம் நவ்லகா உள்ளிட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்!

மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

*****

ஜனநாயக உரிமைக்கான மக்கள் ஒன்றியம்
People’s Union for Democratic Rights (PUDR)

27 ஏப்ரல் 2020
பத்திரிகைச் செய்தி

கரோனா காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய கைதிகளை உடனடியாக விடுதலை செய்!

14,ஏப்ரல் 2020 அன்று மும்பை மற்றும் தில்லியில் தேசியப் புலானாய்வு முகமை (NIA) முன்பு சரணடைந்த ஆனந்த் தெல்தும்டெ மற்றும் கௌதம் நவ்லகா ஆகியோரின் உடல் நிலை குறித்து PUDR கவலை கொள்கிறது. ஜனவரி 2018 பீமா கோரேகான் வழக்கில் இருவரும் வேண்டும் என்றே பிணைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 11 மனித உரிமைப் போராளிகள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தான் ஏற்கனவே சுவாசக் கோளாறில் அவதியுறுவதாலும் மேலும் தற்போதைய கரோனா நோய்த்தொற்று பரவிவரும் சூழலில் தன்னைச் சிறையில் அடைப்பது தனது உயிருக்கு மிகவும் ஆபத்தானது என்பதாலும் தன்னைப் பிணையில் விடக்கோரி ஆனந்த் தெல்தும்டெ மனு செய்தபோது அதை நிராகரித்தது மும்பையில் உள்ள NIA நீதிமன்றம்.

இன்றைய சூழலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உடல்நிலை மிகவும் ஆபத்துக்குரியது என்கிற உண்மையை நினைவூட்டுகிறோம். 70 வயதாகும் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டெ மற்றும் 67 வயதாகும் கௌதம் நவ்லகா ஆகியோர் சிறையில் இருப்பது அவர்கள் நலனுக்கு மிகவும் ஆபத்தானது. அவர்கள் இருவரும் புலனாய்வுக்காக தாமாகத்தான் முன்வந்து சரணடைந்தார்கள். அதேபோல விசாரணைக்காக அவர்களை சிறையிலடைக்க விருப்பமில்லை என்பதையும் புலனாய்வு முகமை வெளிப்படுத்தி உள்ளது. தற்போதைய சூழலில் அவர்களை சிறையில் வைத்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

சிறைவாசிகளின் உடல்நலத்திற்கு கரோனாவால் ஆபத்து என்பதை PUDR பலமுறை சுட்டிக்காட்டியதோடு உயர் மட்ட அதிகாரிகளிடமும் அரசிடமும் இது குறித்து முறையிட்டுள்ளது. ஏற்கனவே உடல் நலிவுற்று இருப்பவர்கள் மற்றும் வயதானவர்களை, அவர்கள் மீது எத்தகைய குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்களுக்குப் பிணை வழங்கக் கோரியுள்ளோம். நோய்த்தொற்றுப் பரவலுக்குச் சிறைச்சாலைகள் கேந்திரமான இடம் என்பதால் சிறைவாசிகளின் உயிருக்கு ஆபத்து என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

கரோனா நிலவும் இந்த அசாதாரணமான சூழலில் ஆனந்த் தெல்தும்டெ, கௌதம் நவ்லகா மற்றும் உடல் நலிவோடு நாடு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கும் இடைக்காலப் பிணை வழங்கி விடுதலை செய்யுமாறு இந்திய அரசை PUDR வலியுறுத்துகிறது.

ராதிகா சிட்காரா மற்றும் விகாஸ் குமார்

செயலாளர்கள், PUDR
www.pudr.org


People’s Union for Democratic Rights
27 April 2020
Press Release
Release Vulnerable Prisoners Now!

Both Prof. Anand Teltumbde and Mr. Gautam Navlakha were interrogated by the NIA and have been sent to judicial custody. It has come to light that one of the officers of the NIA, Mumbai has tested positive for Covid-19 in this period. Anand Teltumbde was subsequently tested for suspected exposure and his report is negative for Covid-19.

The NIA court at Mumbai rejected Anand Teltumbde’s bail application that had cited the ongoing Covid-19 pandemic, the high risk in jails and his continuing respiratory ailment. We wish to reiterate that the risks to those lodged in prisons are both very real and with grave consequences. Prof. Anand Teltumbde is 70 years and Mr. Gautam Navlakha is 67 years old. They have both voluntarily surrendered to the investigation. The investigation agency has expressed no desire for further custody for interrogation. Thus no purpose is being served by keeping them in custody at present.

PUDR has repeatedly raised the issue of the health risk that Covid 19 poses to jail inmates and has sent representations to the government and its High Powered Committees. It has demanded provision of bail, irrespective of the nature of the charges, to elderly inmates and those who are suffering from health issues. Jails are recognised to be amongst the most fertile breeding grounds for infectious diseases and the risk to life is obvious for those more vulnerable.

Hence PUDR appeals to the Central government and the courts to recognize the extraordinary circumstances of Covid-19 and to permit interim bail to Anand Teltumbde, Gautam Navlakha and the many others of advanced age and those with ailments currently lodged in prisons in the country.

- Radhika Chitkara and Vikas Kumar
Secretaries, PUDR

No comments:

Post a Comment